TamilSaaga

பல கனவுகளோடு வெளிநாடு சென்ற தமிழக தொழிலாளர்.. எதிர்பாராத வகையில் உயிரிழந்த பரிதாபம் – பல நல்ல உள்ளங்கள் உதவியால் திருச்சி வந்தடைந்த உடல்!

குடும்ப சூழ்நிலையை கருதி தனது குடும்பத்தை காத்திட நமது சிங்கப்பூர் போன்ற பல வெளிநாடுகளுக்கு செல்லும் தொழிலாளர்களின் நிலை, தற்போது உலகெங்கும் பரவி வரும் இந்த வைரஸ் நோயால் ஒருபுறம் கொடூரமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ள நிலையில்.

அவர்கள் வேலை செய்யும் இடங்களிலும், பொது இடங்களிலும் நிகழும் விபத்துகளில் சிக்கி இறக்கும் தொழிலாளர்களின் உடல்களை மீண்டும் தாயகம் கொண்டு செல்வதும் ஒரு சவாலான விஷயமாகவே தற்போது மாறியுள்ளது என்றால் அது மிகையல்ல.

தமிழகத்தில் இருந்து வேலைக்காக வெளிநாடு செல்பவர்களில் சிலர் துரதிஷ்டவசமாக பணியிடத்தில் அல்லது வெளிநாட்டில் இறக்கும் தருவாயில் அவர்களது உடல் உரிய ஆவணங்கள் பூர்த்திசெய்யப்ட்டு தமிழகம் கொண்டுசெல்லப்படும்.

Exclusive : காலை 10 மணிக்கு திருச்சியில் புறப்பட்ட ஏர் இந்திய எக்ஸ்பிரஸ் – இரவு 10 மணிக்கு சிங்கப்பூரில் தரையிறங்கிய அவலம் – மலேசியா வரை சென்று வந்த பயணிகள்!

இந்நிலையில் குடும்பத்திற்காக உழைக்க சவூதி நாட்டிற்கு சென்ற தொழிலாளி ஒருவர் வெளிநாடு சென்ற சில ஆண்டுகளில் அங்கு உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. ராபர்ட் என்ற தொழிலாளியின் உடலை தாயகம் கொண்டுவருவதில் சிக்கல் இருந்தது.

அதன் பிறகு திருச்சி SDPI என்று அழைக்கப்படும் Social Democratic Party of India கட்சி மற்றும் Trichy Social Forum என்ற அமைப்பின் உதவியால் ராபர்ட் அவர்களது உடல் திருச்சி விமான நிலையத்திற்கு கொண்டுவரப்பட்டுள்ள்ளது.

Exclusive : Changi Airport-லிருந்து சென்னை புறப்பட வேண்டிய விமானம் – 16 மணி நேரத்துக்கும் மேலாக ஏர்போர்ட்டில் காத்திருக்கும் பயணிகள்

திருச்சி விமானநிலையம் வந்தபிறகு வேண்டிய ஆவணங்கள் பூர்த்திசெய்யப்பட்டு, ராபர்ட் அவர்களின் உடல் அவரது சொந்தங்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.

Image and Content Courtesy SDPI Trichy

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts