மனித நேயமிக்க பலர் கோடிக்கணக்கில் பிரச்சாரங்கள் செய்து தொண்டைகிழிய கத்தினாலும் பாலியல் வன்கொடுமை என்ற அந்த ஒரு விஷயம் மட்டும் இங்கு மாறாமல் இருந்து வருகின்றது. இந்நிலையில் அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த 9 வயது சிறுமையை பாலியல் வன்கொடுமை செய்த 86 வயது முதியவருக்கு தற்போது ஆயுள் தண்டனை வழங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
உடையார் பாளையம், அரியலூர் மாவட்டத்தில் உள்ள சிறிய ஊர், அந்த ஊரில் வசித்து வருபவர் தான் 86 வயது நிரம்பிய குப்புசாமி. கடந்த 2020 ஆண்டு அந்த பகுதிக்கு அருகில் உள்ள கோவிலுக்கு வந்த சுமார் 9 வயது நிரம்பிய சிறுமியை அவர் பாலியல் பாலத்காரம் செய்துள்ளார்.
மேலும் குப்புசாமி இந்த விஷயத்தை யாரிடமும் சொல்லக்கூடாது என்றும் அந்த சிறுமியை மிரட்டியுள்ளார். அதன் பிறகு வீட்டிற்கு சென்ற சிறுமி வலியால் துடிக்க, அந்த சிறுமியின் தாய் நடந்ததை குறித்து அந்த சிறுமியை அதட்டி கேட்டுள்ளார்.
பிறகு கோவில் அருகே நடந்த விஷயத்தை சிறுமி கூற, ஜெயன்கொண்டம் போலீசாரிடம் அந்த சிறுமியின் தாய் புகார் அளித்துள்ளார். உடனடியாக குப்புசாமி கைது செய்யப்பட்டு இரண்டு ஆண்டுகளாக நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வந்தது.
இந்நிலையில் குப்புசாமிக்கு சாகும் வரை ஆயுள் தண்டனை வழங்கி அரியலூர் மகிளா மீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. திருச்சி மத்திய சிறையில் தற்போது குப்புசாமி அடைக்கப்பட்டுள்ளார். 86 வயது முதியவர் பாலியல் வழக்கில் ஆயுள் தண்டனை பெற்றது அரியலூர் பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.