TamilSaaga

சிங்கப்பூருக்கு வர 60 நாட்களுக்கு மேல் பயிற்சி எடுத்து வரும் skilled test நல்லதா? உடனே சிங்கப்பூர் அழைத்து வரும் pcm permit நல்லதா? வித்தியாசம் என்ன? இத முழுசா படிச்சு தெரிஞ்சிக்கிட்டு பணம் கட்டுங்க

சிங்கப்பூர் வேலைக்கு வரும் பலரிடைய பிரபலமாக இருக்கும் skilled test மற்றும் pcm permit இடையே என்னென்ன வித்தியாசங்கள் இருக்கிறது.

சிங்கப்பூரில் வேலைக்காக பல விதமான விசாக்கள் கொடுக்கப்படுகிறது. இதில் பலரும் முக்கியம் கொடுப்பது skilled testக்கு தான். அதில் பெரிதாக ஏமாற்ற முடியாது என்பதால் அதிகமாக டெஸ்ட் அடித்தே பலர் சிங்கப்பூருக்கு வேலைக்காக வருகின்றனர். இதில் வேலை கொஞ்சம் கடினமானதாகவே இருக்கும். சம்பளம் ஒரு நாளைக்கு $18 அல்லது $20 கொடுக்கப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கிறது.

OTயும் இந்த துறைகளில் அதிகமாக கிடைக்கும். அதனால் உங்களால் கணிசமான தொகையை உங்கள் குடும்பத்துக்கு அனுப்ப முடியும். ஆனால் இதில் டெஸ்ட் அடிப்பது கஷ்டம் என நினைக்கும் பலர் PCM permitக்கு முக்கியம் கொடுப்பார்கள். ஏஜென்ட்டை பார்த்து உங்க பாஸ்போர்ட்டை கொடுத்தால் உங்களுக்கு எதும் நிறுவனங்களில் வேலை பார்த்து கொடுப்பார்கள். சம்பளமும் குறைவாகவே இருக்கும்.

இதில் skilled testக்கு 4 முதல் 4.50 லட்சம் செலவாகும். pcm permitக்கு 2 முதல் 3 லட்சம் செலவாகும். skilled test அடிப்பவர்களுக்கு சிங்கப்பூர் வருவதற்கு 2 முதல் 3 மாதம் ஆகும். pcm permitல் உடனே வந்துவிடலாம். இதில் வேலை கொஞ்சம் கஷ்டமாக இருக்கும். skilled testல் சம்பளத்தில் பிடித்தம் என்று எதுவும் இருக்காது. ஆனால் pcm permitல் $100 டாலர் வரை பிடித்தம் இருக்கும்.

அடுத்த முறை சிங்கப்பூர் வரும்போது டெஸ்ட் அடித்தவர்களுக்கு செலவுகள் குறையும். அதிலும்,அனுபவம் ஏற ஏற உங்களுக்கு நல்ல சம்பளத்துடன் வேலை கிடைக்கும். ஆனால் pcm permitல் வந்தவர்களுக்கு முதல் முறை கேட்ட கட்டணத்தினையே ஏஜென்ட் இரண்டாவது முறையும் கேட்பார்கள்.

அதிகமாக தொகையை சிங்கப்பூர் வர இன்வெஸ்ட் செய்ய தயாராக இருந்தால் நீங்கள் skilled test முடித்தே வரலாம். முதல் பணம் கட்டுவதில் பெரிய கஷ்டம் இருக்கிறது என்றால் pcm permitல் சிங்கப்பூர் வரலாம்.

சிங்கப்பூரின் அனைத்து முக்கியமான செய்திகளையும் தமிழில் தெரிந்து கொள்ள “Tamil Saaga Singapore” facebook பக்கத்தை follow பண்ணுங்க

Related posts