TamilSaaga

சிங்கப்பூர்.. மனம் மற்றும் உடல் ரீதியாக தாக்கப்படும் பொது ஊழியர்கள்.. ஏன்? மனம் திறந்த “ஆம்புலன்ஸ் பணியாளர் சிவச்சந்திரன்” – இனவெறி தான் காரணமா?

சிங்கப்பூர், ஒரு தனியார் மருத்துவமனையில் வேலைபார்க்கும் வரவேற்பாளராக இருந்தாலும் சரி அல்லது பொது சுகாதார மையத்தில் இருக்கும் மருத்துவராக இருந்தாலும் சரி, அண்மைக்காலமாக சுகாதாரப் பணியாளர்கள்பலர் உடல் ரீதியாகவும் உள்ள ரீதியாகவும் சக மனிதர்களால் துன்புறுத்தப்படுகின்றனர் என்று தான் கூறவேண்டும்.

இதுமட்டுமல்லாமல் சிங்கப்பூரில் பொதுப் போக்குவரத்து மற்றும் சட்ட அமலாக்கம் உள்ளிட்ட பல பிற துறைகளிலும் இதுபோன்ற நிகழ்வுகள் அண்மைக்காலமாக அதிகரித்து வருவதாகத் தெரிகிறது.

சுகாதார மையங்கள்

சிங்கப்பூரில் சில மாதங்களுக்கு முன்பு ஒரு வயதான ஆண் நோயாளி, ஒரு பெண் செவிலியரிடம் தகாத முறையில் நடந்துகொள்வதைக் கண்டதும், அருகில் இருந்த சுகாதார உதவியாளரான திரு. லாம், அவரது சக ஊழியருக்கு உதவ சம்பவ இடத்திற்கு விரைந்தார்.

சிங்கப்பூர் புலம்பெயர் தொழிலாளர்களுக்கான MWCare App.. எழுத்துப்பிழைகளோடு காணப்படும் “தமிழ் வழி சேவை” – உடனடி நடவடிக்கை எடுக்குமா “eclinic”?

அப்போது அந்த நோயாளி அந்த பெண்ணை விட்டுட்டு அதற்கு பதிலாக லாம்-மிடம் சண்டையிட துவங்கினர்.இறுதியில் அவரது வயிற்றில் ஓங்கி ஒருமுறை குத்திவிட்டு கூச்சல் குழப்பத்தில் ஈடுபட அந்த முதியவர் மற்ற ஊழியர்களால் கட்டுப்படுத்தப்பட்டார்.

ஆம்புலன்ஸ் சேவையிலும்..

அதே போல திரு. சிவச்சந்திரன் கடந்த ஆண்டு செப்டம்பர் 15ம் தேதி 20 வயது நோயாளியை மனநலக் கழகத்திற்கு அழைத்துச் சென்றபோது, ​​அவருக்கு கிடைத்த பரிசு மார்பில் ஒரு குத்து. அதீத கோவம் வந்தபோதும் அவர் போலீசில் புகார் ஏதும் அளிக்கவில்லை.

அந்த “நோயாளி மனரீதியாக நிலையற்றவராக இருப்பதால், அவர் செய்வதை பொறுத்துக்கொள்வதை தவிர வேறு வழியில்லை என்று ,” என்று தனியார் ஆம்புலன்ஸ் சேவையான Abella ஏஜென்சியில் பணிபுரியும் திரு. சிவச்சந்திரன் கூறினார். அவர் அந்த நிறுவனத்தில் பணிபுரிந்த 16 ஆண்டுகளில், அவர் பல முறை வாய்மொழி வழியாக பல அவதூறு பேச்சுக்களை எதிர்கொண்டதாகவும், 10 வழக்குகளில் உடல் ரீதியாக தாக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

டாக்ஸி ஓட்டுநர்கள்

25 ஆண்டுகளுக்கும் மேலாக வாகனம் ஓட்டும் 70 வயது Jarry Pang கடந்த 2019ம் ஆண்டு ஒரு பயணி தன்னை தாக்கியதாக கூறினார். காரணம் தனது காரில் பயணம் செய்த அந்த பயணி சொன்ன சாலையில் தான் செல்லாததற்காக தன்னை அவர் தாக்கியதாக Jarry கூறினார்.

இதுபோன்ற பல வாடிக்கையாளர்களை தனது வாழ்க்கையில் பார்த்துள்ளதாக அவர் கூறியது குறிப்பிடத்தக்கது. இதில் பல சந்தர்ப்பங்களில் அவர் போலீசின் உதவியை கூட நாடியதில்லை என்று கூறுகின்றார்.

சரி இவை ஏன் நிகழ்கின்றது?

இதற்கென்று தனி ஆய்வுகள் செய்யப்படவில்லை என்றபோது, மருத்துவ ஊழியர்கள், டாக்ஸி ஓட்டுனர்கள் என்று இவர்கள் தாக்கப்படுவதற்கு ஒருசில காரணம் அவர் செய்கின்ற வேலைதான். பொறுத்துப்போகும் மனப்பாண்மை இவ்வகை ஊழியர்களிடம் அதிகம் உண்டு.

நியூயார்க், லண்டன் கூட இரண்டாம் பட்சமே.. சிங்கப்பூர் தான் இதில் நம்பர்.1 – ஜெயலலிதா சிங்கப்பூர் வந்திருந்தால் இன்று தமிழகத்தின் “தலையெழுத்தே” மாறியிருக்கலாம்!

குறிப்பாக மருதுவானமைகளில் வேலைபார்க்கும் ஊழியர்கள் மிகுந்த மரியாதையுடன் தான் தங்களிடம் வரும் நோயாளிகளை நடத்துவர். அப்படி இருக்கையில் அவர்களை மக்கள் ஒருவித விரோத உணர்ச்சியோடு அணுகுவது இயல்பாகிவிடுகிறது. Racism எனப்படும் இனவெறியும் சில நேரங்களில் இதுபோன்ற செயல்களுக்கு காரணமாக மாறுகிறது.

பல சமூகத்தை சேர்ந்த மக்கள் இங்கு ஒன்றுகூடி வாழும் அதே நேரத்தில் சிங்கப்பூரில் உள்ள பல விதமான வேலைகளில் பல நாடுகளை சேர்ந்த மக்கள் பணியாற்றி வருகின்றனர். ஆகையால் இனப்பகுபடும் போன்ற அத்துமீறல்களுக்கு வழிவகுக்கின்றது.

Image and Content Source – Straitstimes

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts