உலக அளவில் தற்போது தானியங்கி Tesla கார்களின் ஆதிக்கம் அதிக அளவில் உள்ளது என்று தான் கூறவேண்டும். இந்நிலையில் சுமார் 800 கிலோமிட்டர் நீளம் கொண்ட பல நாள் சாலை பயணத்தை Tesla காரில் தானியங்கி செயல்முறை மூலம் கடந்த சிங்கப்பூர் தம்பதிகள் இணையத்தில் வெளியிட்ட புகைப்படங்களால் தற்போது சர்ச்சை வெடித்துள்ளது. அந்த சிங்கப்பூர் தம்பதி பினாங் பகுதியை நோக்கி Auto Pilot முறையில் பயணித்தது குறித்து அப்பகுதி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
குவாங் மிங் டெய்லி செய்தி நிறுவனம் அளித்த தகவலின்படி, மலேசிய புக்கிட் அமான் போக்குவரத்து விசாரணைகள் மற்றும் அமலாக்கத் துறையின் தலைமை உதவி இயக்குநர் கண்காணிப்பாளர் பக்ரி ஜைனல் அபிடின் அவர்கள் இது மலேசியா சட்டப்படி குற்றம் என்றும் (Auto Pilot முறையில் வாகனம் ஓட்டுவது), ஆகையால் போலீசார் நிலப் போக்குவரத்துச் சட்டம் 1987ஐப் பயன்படுத்தி விசாரணையைத் தொடங்குவார்கள் என்றும் கூறினார்.
Massachusetts Institute of Technology (MIT)ன் ஆராய்ச்சி அறிக்கையை மேற்கோள் காட்டி, Auto Pilot செயல்பாடுகளைப் பயன்படுத்துவது ஓட்டுநர்கள் கவனக்குறைவாகவும் சாலை நிலைமைகளுக்கு உணர்ச்சியற்றவர்களாகவும் இருக்க வழிவகுக்கும் என்றார் அவர். மேலும் இது ஓட்டுநரை சாலையின் சுற்றுப்புறத்தை மேல் உள்ள கவனத்தை குறைக்கும் என்றும். அதற்கு பதிலாக வாகனம் ஓட்டும்போது மொபைல் ஃபோனைப் பயன்படுத்துவது போன்ற கவனத்தை சிதறடிக்கும் விஷயங்களில் நேரத்தை ஓட்டுநர்கள் செலவிட வழிவகுக்கும் என்றும்” கூறினார்.
டெஸ்லா வாகனத்தின் மூலம் 800 கிலோமீட்டருக்கு அதிகமான தூரத்தை கடக்க முடியும் என்று கூறும் வகையில் அந்த சிங்கப்பூர் தம்பதிகள் இதை செய்ததாக கூறியுள்ளனர். மேலும் நாங்கள் Auto Pilot முறையை Demonstrate செய்து காட்டத்தான் கைகளை ஸ்டேரிங் வீலில் இருந்து எடுத்ததாகவும் அவர்கள் தெரிவித்துள்ளனர். டெஸ்லா கார்கள் Auto Pilot முறையில் இருந்தாலும் ஓட்டுநர்கள் ஸ்டேரிங் வீலில் இருந்து கைகளை எடுக்க கூடாது என்பதை நாங்கள் அறிவோம் என்று கூறியுள்ளனர்.
இருப்பினும் தற்போது மலேசிய போலீசார் இதுகுறித்து ஆய்வு செய்யது வருகின்றனர்.