TamilSaaga
csl vs rcb

csk vs rcb | ஐபிஎல் முதல் மேட்சுக்கான டிக்கெட்

csk vs rcb : “பட்டைய கிளப்பு.. குட்டைய குழப்பு” என்ற தத்துவம் நிறைந்த பாடல் வரிகளுக்கு சான்றாக அமைந்திருக்கிறது ஐபிஎல் 2024 முதல் மேட்சுக்கான டிக்கெட் விற்பனை!

ஆம்! மிக பலத்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில், ஐபிஎல் 2024 சீசனுக்கான முதல் போட்டி மார்ச்.22ம் தேதி சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற உள்ளது. தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணியும், டு பிளசிஸ் தலைமையிலான ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணியும்.. மன்னிச்சூ.. “ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு” அணியும் மோதுகின்றன. ஏனெனில், நேற்று தான் தனது அணியின் பெயரை லைட்டாக பட்டி பார்த்து டிங்கரிங் செய்துள்ளது ஆரசிபி நிர்வாகம். (நியூமராலஜி பார்த்திருப்பாய்ங்களோ!!?) மேட்டருக்கு வருவோம்.. இரவு 8 அணிக்கு இப்போட்டி தொடங்கவுள்ள நிலையில், இரு அணி வீரர்களும் தீவிர வலைப்பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர்.

இந்திய அணிக்காக விளையாடிய போது கூட, பெரிதாக எமோஷனலை வெளிப்படுத்தாத தோனி, சென்னை அணிக்காக விளையாடும் போதும் மட்டும், அவுட்டாகி வெளியே சென்ற பிறகும் கிரவுண்டுக்குள் நுழைந்து அம்பயரை நோக்கி விரலை நீட்டி சண்டை போடுவார்.. தோல்வியை தாங்கிக் கொள்ள மாட்டார்.. வெற்றிக்கான கடைசி பந்தை கூட பார்க்க முடியாமல் கண்களை மூடிக் கொள்வார்.. ‘ஜெயிச்சுட்டோம் மாறா’ என்ற ஜடேஜா ஓடி வந்து கட்டியணைக்கும் போது, கண்ணீர் சிந்துவார். ஏனெனில்.. தமிழக மக்கள் அவர் மீது காட்டும் அளவில்லா அன்பும், எல்லையில்லா பாசமும் அவருடைய இயல்பான கேரக்டரை உடைத்து இப்படியெல்லாம் செயல்பட வைக்கிறது. சென்ற ஆண்டு நடந்த ஐபிஎல் தொடரில், தோனி களமிறங்கிய ஒவ்வொரு போட்டியின் போதும், அந்த மேகங்களே வெடித்து சிதறும் அளவுக்கு ரசிகர்களின் கோஷம் விண்ணப் பிளக்க வைத்ததே அதற்கு சாட்சி.

இந்நிலையில், இதுதான் தனது கடைசி சீசன் (?) என்ற பலத்த விவாதங்களுடன் களமிறங்குகிறார் எம் எஸ் தோனி. இதற்கு மேல் சொல்லவா வேண்டும்? ரசிகர்கள் சும்மா விடுவார்களா என்ன? இந்த எதிர்பார்ப்பை அப்படியே பயன்படுத்திக் கொண்ட ஐபிஎல் நிர்வாகம், முதல் போட்டியே தோனி vs கோலி (டு பிளசிஸ் ஜஸ்ட் கேப்டன் தான் பாஸ். மற்றபடி அங்க GOAT-ன்னா அது கோலி தான்) என்று அறிவிக்க, டிக்கெட்டுக்கான டிமாண்ட் இன்னும் எகிறியது. கடந்த முறை டிக்கெட்டுகளை நேரடியாக ஸ்டேடியங்களில் டிக்கெட் விற்பனை செய்ததால், பல முறைகேடுகள் நடைபெற்றதாக சர்ச்சை எழுந்ததால், இம்முறை ஆன்லைனில் மட்டுமே விற்பனை செய்யப்படும் என்று அறிவிக்கப்பட்டது.

இதைத் தொடர்ந்து, ரூ.1700-ல் தொடங்கி ரூ.7500 வரை ஒரு டிக்கெட்டின் விலை அறிவிக்கப்பட்டது. ஆனால், டிக்கெட் விற்பனை தொடங்கிய சில நொடிகளிலேயே லட்சக்கணக்கான மக்கள் அதே சர்வரில் நுழைந்ததால், அந்த இணையதளமே ஸ்தம்பித்துவிட்டது. லட்சக்கணக்கை மக்கள் கியூவில் இருந்தத நிலையில், அதில் முதல் 30,000 பேருக்கு மட்டுமே டிக்கெட் கிடைத்தது. அதேசமயம், ஆன்லைனில் டிக்கெட் பெற்ற சிலர் பல்வேறும் சமூகதள பக்கங்களில் டிக்கெட்டுகளை அதிக விலைக்கு விற்பதாகவும் கூறப்படுகிறது. எனவே, அப்படி ஏதாவது ஒரு விளம்பரத்தை நீங்கள் பார்த்தால், அதை நம்பி பணம் கொடுத்து வாங்கிவிட வேண்டாம் என்றும் எச்சரிக்கப்படுகிறது. ஏனெனில், இங்கே டிமாண்ட் தான் பணமாக மாறுகிறது. அதை வைத்து கொள்ளை லாபமும் பார்க்கப்படுகிறது.

ஸோ கவனமா இருங்க.. ஹாயா 22ம் தேதி நைட்டு ஃப்ரெட்ஸோட சேர்ந்து டிவியில் மேட்சை ஆட்டம் பாட்டத்தோட என்ஜாய் பண்ணுங்க. நீங்க தோனி ரசிகராக இருந்தால், கமெண்ட்டில் தோனிக்கு இதுதான் கடைசி சீசனாக இருக்குமா என்பதையும் பதிவிடுங்க.

Related posts