சிங்கப்பூரில் CHAS சமூக சுகாதார உதவித் திட்டத்தின் கீழ் நீலநிற கொண்ட அட்டை வைத்திருப்பவர்களுக்கு பேரங்காடிகளில் வியாழக்கிழமைகளில் 3 விழுக்காடு தாங்கள் வாங்கும் பொருட்களில் இருந்து கட்டண கழிவு வழங்கப்படும் என்று தற்போது தெரிவிக்கப்பட்டுள்ளது.
நடமாடும் அங்காடிகளிலும் யூனிட்டி மருந்து கடைகளிலும் அந்த கட்டணம் கழிவு பொருந்தும் என்பது கூடுதல் சிறப்பு. மேலும் இந்த ஆண்டு இறுதி வரை இந்த கட்டணம் கழிவு அமலில் இருக்கும்.
முன்னோடித் தலைமுறையினர், மெர்டேக்கா தலைமுறையினர் மற்றும் மூத்த குடிமக்கள் ஆகியோருக்கு ஏற்கனவே உள்ள சலுகையுடன் அந்த புதிய சலுகைகளும் சேர்த்து வழங்கப்படும் என்பது கூடுதல் சிறப்பு.
இந்த புதிய சலுகையால் வழங்குவதால் FairPrice நிறுவனத்துக்கு இந்த ஆண்டு கூடுதலாக 5 லட்சம் வெள்ளி செலவாகும் என்று கணிக்கப்பட்டுள்ளது.