TamilSaaga

சிங்கப்பூர் Dormitoryயில் வசிக்கும் வெளிநாட்டு தொழிலாளர்களே.. “Exit Pass இல்லாமல் வெளியில் செல்ல ரெடியா?” நாளை முதல் Green Signal

சிங்கப்பூரில் தடுப்பூசி போடப்பட்ட புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் நாளை ஏப்ரல் 1 முதல் பொழுதுபோக்கு மையங்களைப் பார்வையிட வெளியேறும் முன் அனுமதிச் சீட்டுகளுக்கு (Exit Pass) விண்ணப்பிக்கத் தேவையில்லை. மேலும் இந்த நடவடிக்கைகள் தங்குமிடங்களில் உள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்களும் பொருந்தும் என்றும் பிரதமர் லீ தெரிவித்துள்ளார் கடந்த மார்ச் 24 அறிவித்தது குறிப்பிடத்தக்கது.

சின்ன வயசு.. “செம” கான்செப்ட் – சிங்கப்பூர் ஆய்வாளர்களை திரும்பிப் பார்க்க வைத்துள்ள மாணவர் – SBS டிரான்சிட் கைக்கொடுத்தா அவர் வாழக்கை “வேற லெவல்” தான்!

இதற்கு முன்பு சிங்கையில் உள்ள புலம்பெயர்ந்த தொழிலாளர்கள் தங்களுடைய தங்குமிடங்களிலிருந்து வெளியேறும் முன், சமூகத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களுக்கு செல்வதற்கான அனுமதிச் சீட்டுக்கு (Exit Pass) தாங்கள் பணி செய்யும் நிறுவனங்களிடம் விண்ணப்பிக்க வேண்டும். இந்நிலையில் இனி தடுப்பூசி போடாத தொழிலாளர்கள் மட்டும் அந்த Exit Pass எடுத்து ART சோதனை முடித்து பொது இடங்களுக்கு சென்றுவரலாம். மற்றபடி முழுமையாக தடுப்பூசி போட்ட தொழிலாளர்கள் Exit Passக்கு Apply செய்ய தேவையில்லை.

பொது இடங்களுக்கு சென்று வருவதற்கு வார நாட்களில் 15,000 தொழிலாளர்களும், வார இறுதி நாட்கள் மற்றும் பொது விடுமுறை நாட்களில் 30,000 தொழிலாளர்களும் அனுமதிக்கப்படுவார்கள் என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்தது. இந்த திருத்தப்பட்ட ஒதுக்கீடுகளில் தற்போது எந்தவித மாற்றமும் இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது. இருப்பினும் MOH கடந்த வாரம் வெளியிட்ட அறிக்கையில் இனி தடுப்பூசி முழுமையாக போட்டுக்கொண்ட தொழிலாளர்களின் சமூக வருகைக்கு முன்னதான ART சோதனை அவசியமில்லை என்று தெரிவித்துள்ளது.

அதே போல இனி முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட பயணிகள் மற்றும் 12 வயது மற்றும் அதற்குக் குறைவான வயதுடைய குழந்தைகள் இன்று மார்ச் 31 அன்று இரவு 11.59 மணி முதல் சிங்கப்பூருக்கு புறப்படுவதற்கு முன் அவர்கள் எடுக்கவேண்டிய “Pre Departure Test மட்டும் எடுத்தாலே இனி சிங்கப்பூருக்குள் நுழைய முடியும்” ஆகவே இனி Entry Approval பெறவேண்டிய அவசியம் இருக்காது (தனிமைப்படுத்துதலும் இல்லை). சிங்கப்பூர் அதன் எல்லைகளை மீண்டும் திறப்பதற்கான மிக முக்கியமான நடவடிக்கையில் ஒன்றாக இது பார்க்கப்படுகிறது. இந்திய உள்பட பிற நாட்டு பயணிகள் இனி எந்தவித கவலையும் இல்லாமலும், VTL போன்ற குறிப்பிட்ட விமானங்களை மட்டுமே நம்பியிராமல் சிங்கப்பூர் வர முடியும்.

விடிவு காலம் பொறந்தாச்சு! நாளை (ஏப்.1) முதல் “Entry Approval” இல்லாமல் சிங்கப்பூர் வரலாம் – Pre Departure Test மட்டும் போதும்

குறிப்பு : சிங்கப்பூர் அரசு வெளிநாட்டு பயணிகளுக்கு Entry Approval இல்லை என்று தெரிவித்தாலும் விமான சேவை நிறுவனங்கள் இந்த விஷயத்தில் இன்னும் எந்தவித நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts