TamilSaaga

“ரத்தக்களரி”! சிங்கப்பூரில் பெண் தோழியுடன் வந்தவரின் மண்டையை இரக்கமின்றி உடைத்த மர்ம நபர் – உச்சி தலையில் “20 தையல்”

சிங்கப்பூரின் Clarke Quay பகுதியில் நடைபெற்றுள்ள வன்முறை சம்பவம் ரத்தங்கள் தெறிக்க நிகழ்ந்துள்ளது.

கடந்த மார்ச் 20ம் தேதி Clarke Quay பகுதியில் உள்ள ரெஸ்டாரண்ட் ஒன்றில் நடந்த பிறந்தநாள் விழா ஒன்றில் லோ (Low) என்ற பெண்ணும் சுவா (Chua) என்ற இளைஞர் ஒருவரும் கலந்து கொண்டுள்ளனர். இதில், Low-ன் ஆண் நண்பர் தான் இளைஞர் சுவா.

இந்த ரத்தம் தெறிக்கும் சம்பவம் குறித்து பெண் தோழி Low, mothership தளத்துக்கு விரிவான பேட்டி ஒன்று அளித்துள்ளார். அதில், “இரவு 10:30 மணியளவில் அருகிலுள்ள 7-11 கன்வீனியன்ஸ் ஸ்டோரில் இருந்து சில குளிர் பானங்கள் வாங்குவதற்காக Chua உணவகத்தை விட்டு வெளியேறினார். அப்போது தனியாக சென்ற Chua-க்கு பின்பக்கத்தில் இருந்து ஒருவர் அவரின் தலையை கூர்மையான ஆயுதத்தால் தாக்கி ஓடிவிட்டார்.

மேலும் படிக்க – “சிங்கப்பூருக்கு இனி திருச்சியில் இருந்து மட்டுமே NON VTL சேவை” – இந்தியாவிலேயே வேறு எந்த பகுதியில் இருந்தும் போக முடியாது – Exclusive தகவல்

அப்போது வெளியான இரத்தம் ஆறு போல ஓடியது. இதனால் Chua உடனே சுயநினைவை இழந்துவிட்டார். எனவே, அவரால் தாக்கியது யார் என்பதை கண்டறிய முடியவில்லை. அது யாரென்று பார்க்கவில்லை, திரும்பிப் பார்த்தாரா என்பது நினைவில் இல்லை. தாக்குதலுக்குப் பிறகு என்ன நடந்தது என்பது அவருக்கு நிஜமாகவே நினைவில் இல்லை, ஏனென்றால் அது திடீரென்று நடந்தது.

இந்த சம்பவம் குறித்து சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படை கூறுகையில், மார்ச் 20 அன்று இரவு 11.05 மணியளவில் கெங் சியோவ் தெருவில் உதவிக்கான அழைப்பு வந்ததாகத் தெரிவித்தது.

மேலும் படிக்க – “வெளிநாட்டில் வேலைப்பார்க்கும் கணவர்.. நடுரோட்டில் காலைப்பிடித்து கதறும் மனைவி” – கடன் கொடுத்தவருக்கு ஏற்பட்ட பரிதாப நிலை

பாதிக்கப்பட்ட chua சிங்கப்பூர் பொது மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டார், அங்கு அவர் தலையில் 10 செமீ முதல் 8 செமீ அளவுள்ள காயத்துடன் காணப்பட்டார். காயத்தின் அளவின் அடிப்படையில், சுமார் 10 செமீ நீளமுள்ள கூர்மையான பொருளால் சுவா தாக்கப்பட்டதாக மருத்துவர் முடிவு செய்தார்.

இறுதியில் அவருக்கு இரண்டு அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டு, 20 தையல்களும் போடப்பட்டுள்ளன. தொடர்ந்து சிங்கை போலீசார் தாக்குதல் நடத்திய மர்ம மனிதர் குறித்து விசாரித்து வருகின்றனர்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts