TamilSaaga

‘தல’ அஜித்தின் ‘வலிமை’ – ரசிகர்களின் காத்திருப்புக்கு பதில் தந்த First Look மோஷன் போஸ்டர்

தல அஜித்தின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட வலிமை படத்தின் first look போஸ்டர் மோஷன் தற்போது வெளியாகி அஜித் ரசிகர்களின் பல கால காத்திருப்புக்கு விடை அளித்துள்ளது. போனி கபூர் தயாரிப்பில் H. வினோத் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் தான் வலிமை. 2014ம் ஆண்டு வெளியான சதுரங்க வேட்டை படத்தின் மூலம் திரையுலகில் இயக்குநராக கால்பதித்தார் வினோத் என்பது குறிப்பிடத்தக்கது.

ஏற்கனவே அஜித் நடிப்பில் வெளியான நேர்கொண்ட பார்வை படத்தை வினோத் இயக்கியுள்ள நிலையில் இரண்டாவது முறையாக வலிமை என்ற படத்தின் மூலம் அஜித்துடன் இணைந்தார். பிரபல தயாரிப்பாளர் போனி கபூர் தயாரிக்கும் இந்த படம் கடந்த 2019ம் ஆண்டு டிசம்பர் மாதம் தொடங்கப்பட்டது. இந்நிலையில் அஜித்திற்கு படப்பிடிப்பின்போது ஏற்பட்ட சிறிய காயத்தால் படப்பிடிப்பு சற்று தள்ளிப்போனது.

அதன் பிறகு 2020ம் ஆண்டு மத்தியில் கொரோனா காரணமாக மீண்டும் படப்பிடிப்பு பணிகள் நிறுத்தப்பட்டது. இந்நிலையில் சுமார் இரண்டு ஆண்டு காலமாக ரசிகர்கள் வலிமை படத்தின் அப்டேட்டுக்காக காத்திருந்து வந்தனர்.

இந்நிலையில் பல மாத காத்திருப்புக்கு பின்னர் தற்போது அஜித்தின் வலிமை படத்தின் First Look மோஷன் போஸ்டர் வெளியாகி ரசிகர்களை படுகுஷியில் ஆழ்த்தியுள்ளது. விரைவில் படம் குறித்த பல தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Related posts