TamilSaaga

சிங்கப்பூரில் 2000 புதிய வேலைவாய்ப்புகள் உருவாக வாய்ப்பு – புங்க்கோல் டிஜிட்டல் மாவட்டம்

சிங்கப்பூரில் பிளாக்செயின், சைபர் செக்யூரிட்டி, ரோபாட்டிக்ஸ் மற்றும் ஸ்மார்ட் லிவிங் சொல்யூஷன்ஸ் ஆகிய துறைகளில் உள்ள நான்கு உலகளாவிய நிறுவனங்கள், புங்க்கோலில் வரவிருக்கும் “ஸ்மார்ட் பிசினஸ் மாவட்டத்தில்” தங்கள் தளத்தை அமைப்பதற்கான திட்டங்களை உறுதிப்படுத்தியுள்ளன.

இந்த நிலையில், புங்க்கோல் டிஜிட்டல் மாவட்டத்தில் தங்கள் திட்டங்களை உறுதிப்படுத்திய பிற தொழில்நுட்ப நிறுவனங்கள் மற்றும் சங்கங்கள், சிங்கப்பூரில் 2,000 க்கும் மேற்பட்ட தொழில்நுட்ப வேலைகளை கூட்டாக உருவாக்கும் என்று தேசிய தொழில்துறை எஸ்டேட் டெவலப்பர் ஜே.டி.சி இன்று புதன்கிழமை (ஜூலை 28) தெரிவித்தது.

இந்த நான்கு நிறுவனங்களான பாஸ்டன் டைனமிக்ஸ், டெல்டா எலெக்ட்ரானிக்ஸ் இன்டெல் (சிங்கப்பூர்), குரூப்-ஐபி, மற்றும் வான்க்சியாங் அல்லாமல் மேலும் இரண்டு நிறுவனங்கள் புங்க்கோல் டிஜிட்டல் மாவட்டத்தில் தங்கள் செயல்பாடுகளை தொடங்கும். மேலும் படிப்படியாக இந்த நிறுவனங்கள் எதிர்வரும் 2024ம் ஆண்டு திறக்கப்படும்.

சிங்கப்பூரின் “முதல் ஸ்மார்ட் வணிக மாவட்டம்” என்று விவரிக்கப்படும் இந்த இடம், 50 ஹெக்டேர் பரப்பளவில் உருவாகவுள்ளது. ஒரு வணிக பூங்கா, சிங்கப்பூர் இன்ஸ்டிடியூட் ஆப் டெக்னாலஜி (எஸ்ஐடி) புதிய வளாகம் மற்றும் சமூக வசதிகளை இணைக்கும பலமாக இந்த இடம் செயல்படும். இதனால் 2000 புதிய வேலைவாய்ப்புகள் உருவாக வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

Related posts