TamilSaaga

சிங்கப்பூர் Yishun பகுதியில் தமிழக ஊழியர் உடல் நசுங்கி பலி! பிரேக் போட மறந்ததால் நிகழ்ந்த கோர விபத்து!

சிங்கப்பூரின் Yishun பகுதியில், இன்று (ஏப்.27) காலை தமிழக தொழிலாளி சண்முகம் ஜோதி என்பவர் ஓட்டிச் சென்ற Prime Mover வாகனம் அவர் மீது மோதியதில் உடல் நசுங்கி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதுகுறித்து Mothership-ல் வெளியிடப்பட்டுள்ள செய்தியில், “39 வயதான சண்முகம் ஜோதி, தான் இயக்கிய Prime Mover வாகனத்தை, 15 Yishun இண்டஸ்ட்ரியல் ஸ்ட்ரீட் 1 க்கு அருகில் நிறுத்திவிட்டு கீழே இறங்கினார். ஆனால், அதன் பார்க்கிங் பிரேக்கை பயன்படுத்த மறந்ததை அப்போது தான் உணர்ந்தார்.

துரதிர்ஷ்டவசமாக, ஒரு சாய்வில் நிறுத்தப்பட்ட அந்த வாகனம், பிரேக் இல்லாத முன்னோக்கி நகர்ந்து, தொழிலாளி சண்முகம் ஜோதி மீது மோதி ஏறி இறங்கியதில் அவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.

இந்த சம்பவம் அருகில் உள்ள தொழில்துறை கட்டிடத்தில் அமைந்துள்ள ஒரு நிறுவனத்தின் கேமராவில் பதிவாகியுள்ளது.

மேலும் படிக்க – இந்திய வம்சாவளி சிங்கப்பூரர்.. தடையை மீறி கடலுக்கு சென்றதால் இழுத்துச்சென்ற அலை – கடலில் சிக்கியவரை காப்பாற்ற சென்று உயிரிழந்த தந்தை மற்றும் மகன்

அந்த வீடியோ காட்சியில் இருந்து படங்கள் சண்முகத்தின் உடல் ஒரு துணியால் மூடப்பட்டிருப்பதைக் காட்டியது.

சண்முகம் பணிபுரியும் தளவாட நிறுவனத்தில் மேலாளரான ஹுவாங் என்ற நபர் இந்த சம்பவம் குறித்து அளித்த பேட்டியில், சண்முகம் சரக்குகளை ஏற்றுவதற்காக யிஷூன் இடத்திற்கு வாகனத்தை ஓட்டிச் சென்றதாக கூறினார்.

விபத்தில் இறந்த சண்முகம், கடந்த ஏழு ஆண்டுகளாக லாஜிஸ்டிக்ஸ் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தார்.

இந்நிலையில், அவரது உடலை இந்தியா கொண்டு செல்ல சண்முகத்தின் குடும்பத்தினருடன் ஏற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

சீன நாளிதழான Shin Min தகவலின் படி, இந்த அபாயகரமான விபத்து காலை 8.09 மணிக்குத் தங்களுக்கு அறிவிக்கப்பட்டதாக போலீஸார் உறுதிப்படுத்தினர்.

மேலும் அவர் சம்பவ இடத்திலேயே இறந்துவிட்டதாக மருத்துவர்கள் அறிவித்தனர்.

இந்த விபத்து குறித்த விசாரணைகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts