TamilSaaga

“ஹெல்ப் பண்ணுங்க”.. சிங்கப்பூரில் விபத்தில் சிக்கிய தந்தை ICU-வில் – CCTV இல்லாததால் மக்களின் உதவியை நாடும் மகள்

சிங்கப்பூரில் தனது தந்தைக்கு நடந்த விபத்தை நேரில் கண்ட சாட்சிகள் யாரும் இருந்தால் தனக்கு உதவி செய்யுமாறு Tik Tok வீடியோ மூலம் வேண்டுகோள் விடுத்துள்ளார் ஒரு இளம் பெண். அவர் வெளியிட்ட அந்த வீடியோ தற்போது சுமார் 1 லட்சம் பேருக்கும் அதிகமாக மக்களால் பார்வையிடப்பட்டுள்ளது. சிங்கப்பூரின் உட்லண்ட்ஸ் அவென்யூ 7ல் கடந்த மார்ச் 16ம் தேதியன்று காலை 11:22 மணிக்கு இந்த விபத்து நிகழ்ந்ததாக Lianhe Zaobao செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

இரண்டாக பிளந்த தலையோடு வந்த உடல்.. தாங்கமுடியாத நாற்றம் : சிங்கப்பூரில் “Embalming ராணிகளாக” வலம்வரும் இரு பெண்கள் – இது சகிப்புத் தன்மையின் உச்சம்

வெளியான அந்த பெண்ணின் TikTok வீடியோவில் “சாலையில் இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்த தனது தந்தை வளைவில் U-Turn எடுத்தபோது ஒரு டாக்ஸி அவர் மீது மோதியதாக” அவர் தெரிவித்தார். இந்த விபத்து நடந்த இடத்திற்கு அருகாமையில் CCTV-கள் எதுவும் இல்லாததால், இந்த சம்பவத்தை நேரில் பார்த்த சாட்சியங்கள் யாரும் இருந்தால் தனக்கு உதவுமாறு அவர் வேண்டுகோள் விடுத்துள்ளார். மேலும் விபத்து பற்றிய தகவல் தெரிந்தவர்கள் அவருடைய இந்த இன்ஸ்டாகிராம் பக்கம் மூலம் அவரைத் தொடர்புகொள்ளலாம் என்றும் கூறியுள்ளார்.

Zaobao செய்தி நிறுவனத்தின் கூற்றுப்படி, 56 வயதான அந்த ஆண் ஓட்டுநர் விபத்துக்குப் பிறகு சுயநினைவுடன் இருந்ததாகவும். உடனடியாக அவர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக போலீசார் தெரிவித்தனர். சிங்கப்பூர் குடிமைத் தற்காப்புப் படையும், மார்ச் 16 அன்று சுமார் 11:20 மணிக்கு இந்த நிகழ்வு குறித்து தகவல் கிடைத்ததும், சம்பவ இடத்திற்கு விரைந்ததாகவும், சிகிச்சைக்காக அந்த நபரை கூ டெக் புவாட் மருத்துவமனைக்கு அனுப்பியதாகவும் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.

சிங்கப்பூர்… “பேருந்தில் மதுரை மீனாட்சியம்மன் கோவில் கோபுரம்” – தமிழர்களின் பெருமையை என்றுமே மறைக்காத நமது சிங்கை

அந்த பெண் TikTokல் வெளியிட்ட தகவலில் அவரது தந்தையின் காயங்கள் “கடுமையாக” உள்ளது என்று தெரிவித்துள்ளார். கல்லீரலின் உட்புற பகுதியில் இரத்தப்போக்கு, வயிற்றுப் பகுதி மற்றும் அவரது நுரையீரலில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது என்றும். மேலும் அவரது விலா எலும்புகள், இடது மேல் தாடை, நாசி மற்றும் கை ஆகியவற்றில் முறிவு ஏற்பட்டுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார். தனது தந்தையின் இந்த நிலைக்கு காரணமான அந்த விபத்து குறித்த சாட்சியங்களை தான் அவர் தற்போது தேடிவருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts