வயது வெறும் எண் என்பதை நிரூபித்தவர்கள் பலர், அந்த வகையில் 77 வயதான சிங்கப்பூரை சேர்ந்த பாட்டி, லின் சோ, தற்போது Black Beltவுடன் டேக்வாண்டோ பயிற்சியாளராக உள்ளார். பிளாக் பெல்ட் என்பது டேக்வாண்டோவில் அதிகபட்சமாக அடையக்கூடிய தரவரிசை ஆகும். அதை அடைய நீங்கள் மொத்தம் ஒன்பது நிலைகளை முடிக்க வேண்டும். Active SG அளித்த தகவலின்படிட, முதல் கருப்பு பெல்ட்டை அடைய, ஒருவர் Spar செய்யவேண்டும், எதிரிகளுக்கு எதிராக தற்காத்துக்கொள்ள வேண்டும் மற்றும் இரண்டு, மூன்று அங்குல பலகைகளை உதை அல்லது அடியால் உடைக்க வேண்டும்.
இந்தியர்கள் இனி சிங்கப்பூர் வந்தால்…
புக்கிட் திமாவில் உள்ள இல்டோ டேக்வாண்டோ அகாடமியில் நான்கு ஆண்டுகளுக்கு முன்புதான் இந்த முதியவர் வகுப்புகளுக்குச் செல்லத் தொடங்கினார். ஆனால் இரண்டு வருடங்களில் அதாவது மே 2020ல் தனது முதல் கருப்பு பெல்ட்டை அவரால் பெற முடிந்தது. மற்ற இளம் பயிற்சியாளர்களை விட இது வேகமான நேரம் என்று அகாடமி கூறுகின்றது. 2018ம் ஆண்டு புக்கிட் திமா ஷாப்பிங் சென்டரில் ஷாப்பிங் செய்து கொண்டிருந்த போது டேக்வாண்டோ வார்ம்-அப் வகுப்பில் கலந்துகொள்ள வாய்ப்பு கிடைத்ததாக தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸிடம் (ST) லின் சோ கூறினார்.
அந்த பாட்டிக்கு அப்போது சில முழங்கால் பிரச்சனைகள் இருந்ததால் அந்த Warm Up நடவடிக்கை அவருக்கு சற்று ஆறுதலை தந்தது. மேலும் அவருக்கு sciatica இருப்பது கண்டறியப்பட்டது, sciatica என்பது இடுப்பு, கால் உள்ளிட்ட இடங்களில் ஏற்படும் வலியாகும். இடுப்பு நரம்பு வழியாக வெளிப்படும் வலி, கீழ் முதுகில் இருந்து இடுப்பு வரை மற்றும் ஒவ்வொரு கால் வரை அவருக்கு பரவும். அந்த Warm-Up நேரத்தில் தன்னால் Squat செய்யகூடமுடியவில்லை என்று அவர் வருத்தப்பட்டுள்ளார்.
ஆனால் அன்று தொடங்கி இன்று வரை அவர் வேகமாக முன்னேறி வருகின்றார், சோஹ் டேக்வாண்டோ போட்டிகளில் பல பதக்கங்களை வென்று இப்போது இரண்டாவது கறுப்பு பெல்ட்டை நோக்கி முன்னேறிவருகின்றார். அவருடைய கால்கள் இப்போது வலிப்பதில்லை, மேலும் அவர் எந்த வலிக்கும் இப்பொது மருந்து சாப்பிடுவதில்லையாம். அவரால் தற்போது 180 டிகிரி Splitஐ எளிதாக செய்யமுடியும். முன்னெல்லாம் என்னால் 45 டிகிரி Split கூட செய்யமுடியாது என்று அவர் கூறினார்.
சோ அகாடமியில் உள்ள மூத்த மாணவி இவர் தான் என்றாலும், அவர் நிச்சயமாக மற்றவர்களுக்கு ஒரு முன்மாதிரியாக உள்ளார், என்று அவரது பயிற்சியாளர் பால் லீ கூறினார்.