TamilSaaga

“தமிழ் உள்பட சிங்கப்பூரின் அதிகாரப்பூர்வ மொழிகளில் Singpass” : Digital Driving License கூட இதில் இருக்கு – அமைச்சர் Teo அளித்த முழு விளக்கம்

சிங்கப்பூரின் நான்கு அதிகாரப்பூர்வ மொழிகளான ஆங்கிலம், சீனம், மலாய் மற்றும் தமிழ் ஆகிய நான்கு மொழிகளிலும் சிங்பாஸ் செயலி தற்போது upgrade செய்யப்பட்டுள்ளது. கடந்த வாரம் வெளியிடப்பட்ட அப்டேட்க்குப் பிறகு இது அமலுக்கு வந்துள்ளது. தற்போதுள்ள டிஜிட்டல் NRICஐ தவிர, கார்டுகள் அல்லது சான்றிதழ்களின் டிஜிட்டல் பதிப்புகளும் சிங்கபாஸ் மூலம் அணுகக்கூடிய வகையில் இருக்கும். இது அரசாங்கத்தால் உருவாக்கப்பட்ட அங்கீகாரம் பெற்ற டிஜிட்டல் அடையாள சரிபார்ப்பு தளம் என்பது குறிப்பிடத்தக்கது.

சர்வ நாடியையும் ஒடுங்க வைக்கும் “சிங்கப்பூர் பிரம்படி”.. மணிக்கு 160 கி.மீ வேகம்.. 4 அடிக்கே “Buttocks” சதை கிழிவது உறுதி!

சிங்கப்பூரில் பதிவுசெய்யப்பட்ட சுகாதார நிபுணர்களுக்கான டிஜிட்டல் பயிற்சி சான்றிதழ்கள் இதில் கடந்த ஜனவரியில் சேர்க்கப்பட்டன. மேலும் டிஜிட்டல் ஓட்டுநர் உரிமங்கள் அடுத்த திங்கட்கிழமை, அதாவது வரும் மார்ச் 7ம் தேதி இதில் சேர்க்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல மார்ச் மாத இறுதியில் இருந்து, வணிக உரிமையாளர்கள் அல்லது அங்கீகரிக்கப்பட்ட பணியாளர்கள், சிங்பாஸின் புதிய கார்ப்பரேட் சுயவிவரப் பிரிவில் வணிகப் பதிவு மற்றும் பங்குதாரர் தகவல் போன்ற அடிப்படை நிறுவனத் தகவல்களை பெற முடியும்.

பிரதமர் அலுவகத்தில் நடந்த (PMO) பட்ஜெட் மீதான விவாதத்தின் போது இன்று புதன்கிழமை (மார்ச் 2) பாராளுமன்றத்தில் சிங்பாஸ் மேம்படுத்தல்களை தகவல் தொடர்பு அமைச்சர் ஜோசபின் தியோ அறிவித்தார். ஸ்மார்ட் நேஷன் மற்றும் டிஜிட்டல் அரசு அலுவலகம் (SNDGO) மற்றும் அரசாங்க தொழில்நுட்ப நிறுவனம் (GovTech) ஆகியவற்றை உள்ளடக்கிய ஸ்மார்ட் நேஷன் மற்றும் டிஜிட்டல் அரசாங்க குழு PMOன் கீழ் செயல்படுகிறது.

ஸ்மார்ட் நேஷன் முன்முயற்சியின் பொறுப்பாளரும் அமைச்சருமான திருமதி தியோ பேசும்போது, சிங்கப்பூரர்கள் இன்று வழக்கமாகப் பயன்படுத்தும் பல டிஜிட்டல் சேவைகள், அதாவது கடந்த 2018ல் தொடங்கப்பட்ட சிங்பாஸ் செயலி உட்பட எல்லாமே கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு முன்புதான் துவங்கியது என்றார். “இன்றைய தேதியில், சுமார் 3.5 மில்லியன் மக்கள் 1,700 டிஜிட்டல் மற்றும் பிற சேவைகளுக்கான அணுகலைப் பெற, சிங்பாஸ் பயன்பாட்டைப் பயன்படுத்துகின்றனர்,” என்றும் அவர் கூறினார்.

“இந்திய வம்சாவளியை சேர்ந்த நாகேந்திரன்” : மீண்டும் ஒத்திவைக்கப்படும் மரணதண்டனை – ஐவர் கொண்ட நீதிபதி குழு முடிவு

“கடந்த 2021 ஆம் ஆண்டில், 350 மில்லியனுக்கும் அதிகமான தனிநபர் மற்றும் நிறுவன பரிவர்த்தனைகள் சிங்பாஸ் மூலம் எளிதாக்கப்பட்டுள்ளன. இருப்பினும் இன்றளவும் சிங்பாஸ் தொடர்ந்து மேம்படுத்தப்பட்டு வருகிறது என்றார் அவர். மேலும் “சிங்பாஸ் பயன்பாட்டில் தங்களுக்கு விருப்பமான மொழியை மாற்ற விரும்பும் பயனர்கள் Setting மெனுவில் அவ்வாறு செய்துகொள்ளலாம் என்றார்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts