TamilSaaga

90 ஆண்டுகளுக்கும் மேலாக.. உலகின் வேறு எந்த பிராண்டும் அசைத்துக் கூட பார்க்க முடியாத “Axe Oil” – உலகமே வியக்கும் சிங்கப்பூரின் “அடையாளம்”

Axe Oil: கோடரி தைலம்! இதனை கேட்டாலே, ‘எங்கள் வீட்டிலும் இருக்கு’ என்று சொல்லக்கூடிய அளவுக்கு நம் அனைவரின் வீட்டிலும் தவிர்க்க முடியா விருந்தாளியாய் இருக்கும் பொருள் இது. உலக நாடுகள் அனைத்தும் தயாரிக்கக்கூடிய தைலங்களில், சிங்கப்பூரில் தயாரிக்கப்படும் இந்த கோடரி தைலம் மட்டும் எப்படி இப்படி பட்டித்தொட்டி வரைக்கும் பிரபலமானது என்று தெரிந்துகொள்வோம்.

பொதுவாக, வெளிநாட்டுக்கு சென்று சொந்த ஊருக்கு வரும்போது வாங்கிட்டு வரக்கூடிய ஒரு பொருள்தான் கோடரி தைலம். இது நமக்கு தெரிந்த ஒன்றுதான். அனால் இந்த கோடரி தைலம் எப்படி உருவானது, யார் தயாரித்தார், எப்படி சிங்கப்பூரின் சிறப்பானது என்று அனைத்தையும் பார்க்கலாம் வாங்க.

கோடரி தைலம் எப்போது, யாரால், எப்படி தயாரிக்கப்பட்டது?

சிங்கப்பூரின் ஆக்ஸ் பிராண்ட் (Axe Brand) லியுங் யுன் சீ (Leung Yun Chee) என்பவரால் 1928-இல் நிறுவப்பட்டது. நிறுவனர் லியுங் யுன் சீ சீனாவின் ஷுண்டேவிலிருந்து சிங்கப்பூருக்கு குடிபெயர்ந்தபோது தொடங்கியது.

அந்த சமயத்தில் அதிஷ்டவசமாக டாக்டர். ஷ்மீட்லர்(Dr. Schmeidler) என்ற ஜெர்மன் மருத்துவரைச் சந்தித்தார். அப்போது அவர் ஒரு மருத்துவகுணம் கொண்ட எண்ணெய்க்கான சூத்திரம், செய்முறை மற்றும் ரகசியத்தை Leung Yun Chee-இடம் பகிர்ந்து கொண்டார்.

லியுங் ஆரம்பத்தில் ஷாங்காய் பட்டு வர்த்தக நிறுவனத்தில்(Shanghai Silk Trading Company) மேலாளராக இருந்தார். ஆனால், 3 ஆண்டுகளுக்குப் பிறகு, அவர் தனது சொந்த வணிகத்தை நடத்த முடிவு செய்தார்.

இதனை அடுத்து Leung Yun Chee அந்த எண்ணெயின் பயன்பட்டால் ஈர்க்கப்பட்டு, Dr. Schmeidler அளித்த மருத்துவ குறிப்புகளைக் கொண்டு கோடாலி தைலத்தை தயாரித்து சந்தையில் விற்றார். அதனையொட்டி சில காலத்திற்கு பிறகு, (Leung Kai Fook Medical Company)லியுங் கை ஃபூக் மருத்துவ நிறுவனத்தைத் தொடங்கினார். இப்படித்தான் ஆக்ஸ் பிராண்ட் யுனிவர்சல் ஆயில்(Axe Brand Universal Oil) பிறந்தது.

ஆக்ஸ் பிராண்ட் – ஆரம்பகால வரலாறு

1930 – லியுங் யுன் சீக்கு சவாலான காலம்…

கோடரி தைலத்தை அனைவரும் உடனடியாக ஏற்றுக்கொள்ள மறுத்தனர். மேலும் லியுங் யுன் சீ சீனா மற்றும் ஹாங்காங்கில் உள்ள நிறுவனங்களுடன் கடுமையாக போட்டி போடும் சூழ்நிலைகளை எதிர்கொண்டார். இயற்கையாகவே லட்சியம் கொண்ட Leung Yun Chee தயங்காமல் தனது கோடரி தைலத்தை மார்க்கெட்டிங் செய்ய தொடங்கினார்.

இதற்காக ஒரு கிராபிக் டிசைனர் குழுவை நியமித்து, தனது கோடரி தைலத்திற்கு Logo-ஐ மாற்றி அமைத்தார். அதன் பிறகு ஒரு துண்டு சீட்டில் தைலத்தின் பயன்களை விவரித்து சிங்கப்பூர் முழுவதும் மார்க்கெட்டிங் செய்தார்.

“இந்த முயற்சியினால் அன்று முதல் இன்று வரை கோடரி தைலத்தின் வியாபாரம் மற்றும் பெருமை கொடிகட்டி பறக்கிறது”

1937-1945 – கோடரி தைலம் பிராண்டாக மாறியது…

உலகெங்கிலும் போர் வெடித்ததால், பல வணிகங்கள் போராடிக் கொண்டிருந்தன. இருப்பினும், லியுங் யுன் சீக்கு, தனது Axe Brand-ஐ விரிவுபடுத்த இது ஒரு வாய்ப்பாக அமைந்தது. போரின் போது ஜப்பானியர்கள் சிங்கப்பூரை ஆக்கிரமித்து, வர்த்தகம் நிறுத்தப்பட்டது. எனினும், இது லியுங் யுன் சீக்கு ஒரு பிரச்சனையாக தெரியவில்லை. தொடர்ந்து அவரின் கடின உழைப்பால், Axe Brand Universal Oil பிரமிக்கத்தக்க பிராண்டானது. மருத்துவ எண்ணெய்களில் முன்னணியில் தன்னை நிலைநிறுத்திக் கொண்டது.

“ஆகையால், சிங்கப்பூரின் மிகவும் அங்கீகரிக்கப்பட்ட தயாரிப்புகளில் ஒன்றாக Axe Brand Universal Oil திகழ்கிறது”

1950-1970 – முதல் வெளிநாட்டு சந்தை…

இந்த காலநேரத்தில், கோடரி தைலம் விரிவடைந்தது மட்டுமில்லாமல் ஆசியாவிற்கு அப்பால் உள்ள சந்தைகளை அடைந்தது. கடல்வழிப் பயணமாக சவுதிக்கு ஹஜ் யாத்திரை சென்றவர்களுக்கு ஏற்படும் கடல்நோய்களான‌(Sea Sick) தலைசுற்றல், வாந்தி போன்றவற்றுக்கு கோடாலி தைலம் சிறந்த நிவாரணியாக இருந்தது. யாத்ரீகர்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட பிறகு முதல் குறிப்பிடத்தக்க வெளிநாட்டு சந்தை சவுதி அரேபியா(Saudi Arabia) ஆகும்.

“இதனால் அந்தந்த நாடுகளில் பெரிய வியாபார வாய்ப்பை பெற்றது கோடாலி தைலம்”

1970கள்…

1971 ஆம் ஆண்டில், நிறுவனர் லியுங் யுன் சீ காலமானார், அவரது மூத்தமகன் லியோங் ஹெங் கெங்(Leong Heng Keng) பொறுப்பேற்றார். லியோங் ஹெங் கெங் தனது தந்தையுடன் 20ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்தார். பின்னர் அவரது சகோதரர் லியோங் முன் சும்(Leong Mun Sum) உடன் இணைந்தார், அவர் 1986 இல் நிறுவனத்தில் நிர்வாக இயக்குநராக மீண்டும் சேர்ந்தார்.

இன்று…

Axe Brand ஆசியாவின் முன்னணி மருந்து எண்ணெய் பிராண்டுகளில் ஒன்றாகவும், சிங்கப்பூரில் அங்கீகரிக்கப்பட்ட பாரம்பரிய பிராண்டாகவும் பெருமை கொள்கிறது.

இன்று, சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேசியா, மத்திய கிழக்கு மற்றும் சீனா உட்பட ஆசியாவின் முன்னணி மருந்து எண்ணெய் பிராண்டுகளில் Axe Brand Universal Oil ஒன்றாகும்.

ஆக்ஸ் பிராண்ட் யுனிவர்சல் ஆயில் பேக்கேஜிங் அரபு, கம்போடியன், பிரஞ்சு, கிரேக்கம், இந்தோனேசிய, இத்தாலியன், ஸ்பானிஷ், இலங்கை, சுவாஹிலி, தாய் மற்றும் வியட்நாமிய என 12 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது.

Axe Brand நிறுவனம் சிங்கப்பூர், மலேசியா, இந்தோனேசியா, சீனா மற்றும் வியட்நாம் ஆகிய நாடுகளில் ஐந்து நல்ல உற்பத்தி நடைமுறை (GMP)-சான்றளிக்கப்பட்ட தொழிற்சாலைகளை இயக்குகிறது. ஆக்ஸ் பிராண்ட் தயாரிப்புகளும் 50க்கும் மேற்பட்ட நாடுகளில் விற்கப்படுகின்றன.

90 ஆண்டுகளுக்கு மேலாக இந்த கோடரி தைலம் உலகம் முழுவதும் பயன்படுத்தப்படுகிறது.

இந்த வழியில், கோடரி தைலம்(Axe Oil) ஆனது உலகெங்கிலும் உள்ள மில்லியன் கணக்கானவர்களின் இதயங்களிலும் மனதிலும் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது, தொழில்துறையிலும் குடும்பங்களிலும் நீங்கள் நம்பக்கூடிய தீர்வாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

இது Ax Brand Universal Oil, Ax Brand Inhaler, Ax Brand Red Flower Oil மற்றும் Gold Metal Medicated Oil ஆகிய பல்வேறு தயாரிப்புகளை உற்பத்தி செய்கிறது. அதே வேளையில், யூகலிப்டஸ், கற்பூரம், மெந்தோல் மற்றும் பிற எண்ணெய்களின் கலவையைக் கொண்டது கோடரி தைலம், இதனால் கோடரி தைலம் விற்பனையில் முதலிடத்தில் உள்ளது. குமட்டல், வாத நோய், வயிற்று வலி, சளி மற்றும் பூச்சிக் கடி போன்ற பல பொதுவான நோய்களுக்கு கோடரி தைலம் மிகவும் பயன்படுத்தப்படுகிறது.

சிங்கப்பூரின் அனைத்து முக்கியமான செய்திகளையும் தமிழில் தெரிந்து கொள்ள “Tamil Saaga Singapore” facebook பக்கத்தை follow பண்ணுங்க

Related posts