TamilSaaga

சிங்கப்பூரில் “இந்த” படிப்பு படித்த இந்தியர்களுக்கு “லட்சக்கணக்கில்” சம்பளம்.. படையெடுக்கும் இளைஞர்கள் – NodeFlair மற்றும் Quest Ventures அறிக்கை

சிங்கப்பூரில் மென்பொருள் பொறியாளர்களுக்கான (Software Engineers) சம்பளம் கடந்த ஆண்டு சராசரியாக 22% அதிகரித்துள்ளது. இது சிங்கப்பூரின் வளர்ந்து வரும் தொழில்நுட்ப வளர்ச்சியை தக்கவைக்க தகுதிவாய்ந்த திறமைகளின் தேவைகளின் பற்றாக்குறையை எடுத்துக்காட்டுகிறது என்று NodeFlair மற்றும் Quest Ventures வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னணி மென்பொருள் பொறியாளர்கள் போன்ற சில அனுபவமிக்க பணிகளுக்கான ஊதியம்,, இந்த காலகட்டத்தில் சராசரியாக 32% வரை அதிகரித்துள்ளதாக அந்த அறிக்கை கூறுகிறது. Business Times அறிக்கையின் படி, சிங்கப்பூரில் முக்கிய பொறுப்புகளில் இருக்கும் Software Engineers-களுக்கு மாதம் S$15,950 வரை ஊதியம் கொடுக்க நிறுவனங்கள் தயாராக இருப்பதாக கூறப்பட்டுள்ளது. அதாவது இந்திய மதிப்பில், ஏறக்குறைய 9 லட்சம் ரூபாய். குறிப்பாக, இந்தியாவைச் சேர்ந்த Software Engineers-களுக்கான Wanted சிங்கப்பூரில் மிக அதிகமாக உள்ளது.

Meta Platforms Inc மற்றும் Alphabet Inc.’s Google போன்ற உலகளாவிய நிறுவனங்களுக்கான Asia-Pacific மையமாக இருக்கும் அதே வேளையில், சிங்கப்பூர் பல வேகமாக வளர்ந்து வரும் ஸ்டார்ட்அப்களை ஈர்த்துள்ளது. சிங்கப்பூர் மற்றும் தென்கிழக்கு ஆசியப் பகுதியை அமெரிக்க மேற்குக் கடற்கரையுடன் இணைக்கும் கடலுக்கடியிலான கேபிள் திட்டங்களை இந்த இரண்டு அமெரிக்க நிறுவனங்களும் கடந்த ஆண்டு அறிவித்தன.

மேலும் படிக்க – “யாரோ செய்த தவறு” : சிங்கப்பூரில் தர்பூசணியால் ஏற்பட்ட சோகம் : என்னோட வருமானமே போச்சு, புலம்பும் ஓட்டுநர்!

உயர் தகுதி வாய்ந்த பொறியாளர்களுக்கு சிங்கப்பூரில் அத்தனை டிமாண்ட் உள்ளது. இது அவர்களுக்கான ஊதியத்தில் அதிக மாறுபாட்டை உருவாக்கியுள்ளது. இதனை அவர்களது offer letters மற்றும் payslips-களை ஆராய்ந்து உறுதிப்படுத்தியுள்ளனர் . அதாவது தங்களின் ஜூனியர்களின் ஊதியங்களை விட 3 மடங்கு அதிகமாக இவர்கள் ஊதியம் பெறுகின்றனர். Sea Ltd.’s Shopee, ByteDance Inc. மற்றும் Grab Holdings Ltd. ஆகியவை தொழில்நுட்பத் துறையில் அதிகம் தேடப்பட்ட நிறுவனங்களாகும். Amazon.com Inc. மற்றும் Visa Inc. மற்றும் Google மற்றும் Meta (பேஸ்புக் தாங்க Meta) போன்ற பெரிய அமெரிக்க நிறுவனங்களும் இந்த லிஸ்டில் உள்ளன.

சிங்கப்பூரில் அதிகரிக்கும் cost of living-ம் இந்த அதிகப்படியான சம்பள உயர்வுக்கு காரணம். கடந்த ஆண்டின் மூன்றாவது காலாண்டில், இங்கு வாடகை என்பது ஆறு ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு உயர்ந்துள்ளது. worker விசாக்களுக்கான நிபந்தனைகள், அனுபவம் வாய்ந்த தொழிலாளர்கள் சிங்கப்பூர் வருவதையும் கடினமாக்கியுள்ளன. சிங்கப்பூர் கடந்த வாரம் அதன் வருடாந்திர பட்ஜெட்டில், பெரும்பாலான வேலைவாய்ப்பு பாஸ் வைத்திருப்பவர்களின் குறைந்தபட்ச சம்பளத் தேவைகளை S$4,500 இலிருந்து S$5,000 ($3,700) ஆக உயர்த்துவதாக அறிவித்தது.

மேலும் படிக்க – “சிங்கப்பூர் வந்திறங்கும் இந்தியர்களுக்கு ஓர் Good News” : இனி Changi Airportல் PCR Test எடுக்கவேண்டாம் – ART எடுக்கவும் உதவி! Exclusive Details

இதற்கு மேலும் சிங்கப்பூர் எல்லைகளை கடுமையாக்கினால், ஏற்கனவே இருக்கும் கடுமையான பணியாளர் பற்றாக்குறையை மேலும் மோசமாக்கும். சிறிய நிறுவனங்களும் உள்ளூர் தொடக்க நிறுவனங்களும் ஜூனியர் தொழில் வல்லுநர்களுக்கான சம்பள உயர்வைத் தக்கவைக்க இயலாது என்று Economist Intelligence Unitன் ஆசியாவிற்கான ஆய்வாளர் Yu Liuqing கூறினார். இனி வரும் காலங்களில் மென்பொருள் பொறியாளர்களின் எண்ணிக்கை சிங்கப்பூரில் இன்னும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கலாம்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts