சிங்கப்பூர் நாடாளுமன்றத்தில் உணவுக்கடைகளின் வாடகை எப்படி இறுதி செய்யப்படுகிறது என்பது குறித்து சுற்றுபுற மூத்த துணையமைச்சர் டாக்டர் எமி கோர் விளக்கமளித்தார்.
சுற்றுப்புற அமைப்பு குத்தகைக்கான ஏலத்தை நடத்தும்போது கடைக்காரர்கள் காலி கடைகளுக்கான வாடகை ஏலம் எவ்வளவு என்பதை சமர்பிக்கலாம்.
அவர்களுக்கு கடை கிடைக்கும் பட்சத்தில் அவர்கள் சமர்பித்த ஏலத்தின் மதிப்பே கடையின் வாடகை.
கடை கிடைத்த முதல் 3 ஆண்டுகளுக்கு வாடகைத் தொகையில் மாறுதல் இருக்காது.
மாறாக குத்தகையானது புதிப்பிக்கப்படும் போது ஒரு மதிப்பீட்டாளரை கொண்டு கடை அமைந்துள்ள இடம், வியாபாரம் மற்றும் மக்கள் நடமாட்டம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு வாடகை தொகை அதிகரிக்க அல்லது குறைக்கப்படும்.
கடந்த ஏப்ரல் – ஜீன் மாதத்தில் புதுப்பிக்கப்பட்ட சுமார் 341 கடைகளில், 198 கடைகளில் வாடகை குறைக்கப்பட்டது, 17 கடைகளில் அதிகரிக்கப்பட்டது மற்றும் 126 கடைகளில் வாடகை மாற்றப்படவில்லை.
இந்த மேற்கண்ட தகவல்களை மூத்த துணை அமைச்சர் நாடாளுமன்றத்தில் பதிவு செய்தார்.