TamilSaaga

சிங்கப்பூரில் குறிப்பிட்ட விளம்பரத்தை நீக்கிய SAMSUNG : மத உணர்வை பாதித்ததா? – என்ன நடந்தது?

சாம்சங் சிங்கப்பூர் ஒரு முஸ்லீம் தாய் தனது Drag Queen மகனுடன் ஆதரவாக இருக்கும் உறவை சித்தரிக்கும் ஆன்லைன் வீடியோ விளம்பரத்தை நீக்கியுள்ளது. பெண்களின் ஆடைகளை ஆடம்பரமான முறையில் உடுத்தும் ஆண்களைத் தான் Drag Queen என்று அழைப்பார்கள். மேற்கத்திய நாடுகளில் 1880களில் இருந்து துவங்கிய இந்த கலாச்சாரம் தற்போது சிங்கப்பூர், இந்தியா போன்ற பல நாடுகளில் இருந்து வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் சிங்கப்பூரில் சர்ச்சையான இந்த வீடியோ தொடர்பாக சில நெட்டிசன்களிடமிருந்து விமர்சனங்களைப் பெற்றதை அடுத்து, கடந்த புதன்கிழமை (ஜனவரி 19) அன்று அனைத்து பொது தளங்களில் இருந்தும் இந்த வீடியோ அகற்றப்பட்டது.

இதையும் படியுங்கள் : “தித்திக்கும் கரும்பும், அத்யாவசிய பொருட்களும்” : புலம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு வழங்கிய சிங்கப்பூர் IAEC

என்ன காணொளி அது?

பெரிட்டா மீடியாகார்ப் வெளியிட்ட தகவலின்படி, இந்த விளம்பரமானது சாம்சங்கின் இயர்பட்கள் மற்றும் கேலக்ஸி வாட்ச்4 ஸ்மார்ட்வாட்ச் ஆகியவற்றை விளம்பரப்படுத்த சாம்சங்கின் “Listen to your Heart” என்ற பல விளம்பர படங்களின் ஒரு பகுதியாகும். இந்த பிரச்சாரத்தில், ஸ்மார்ட்வாட்ச் அவர்களின் இதயத் துடிப்பைப் பதிவுசெய்யும் போது, ​​இயர்பட்கள் மூலம் நேசிப்பவரிடமிருந்து வரும் செய்தியைக் கேட்கும் நபர்களுடன் கூடிய வீடியோக்களின் தொடர் ஒன்றும் இடம்பெற்றது. அதே போல வெளியான வீடியோ ஒன்றில் முஸ்லிம் பெண்ணும் அவரது மகனும் தோன்றினர்.

இது குறித்து பல நெட்டிசன்கள் தங்கள் கருத்துக்களை முன்வைத்துள்ளனர், சில சிங்கப்பூரர்கள் சாம்சங் துடுங் அணிந்த பெண் மற்றும் அவரது Drag Queen மகனை வெளிப்படையாகக் காட்டியதற்காக விமர்சித்தனர். முகமத் என்பவர் வெளியிட்ட கருத்தில் இந்த வீடியோ முஸ்லீம் சமூகத்திற்குள் நிறைய “குழப்பங்களை” தூண்டிவிட்டதாக கூறினார். “வெளிப்படைத்தன்மை” என்ற கருத்தாக்கத்தால் இஸ்லாத்தின் புனிதத்தன்மை பாதிக்கப்படுகிறது என்ற தெளிவான செய்தியை இந்த வீடியோ தெரிவிக்கிறது என்று சிலர் கூறிய நிலையில் சிங்கப்பூர் இஸ்லாமிய மதக் கவுன்சில் (MUIS) மற்றும் சிங்கப்பூரில் உள்ள பிற இஸ்லாமிய குழுக்களும் இந்த விஷயத்தில் ஒரு “உறுதியான நிலைப்பாட்டை” எடுக்க வேண்டும் என்றும் அது வலியுறுத்தியது.

இந்நிலையில் அதே நாளில் வெளியான ஒரு “இந்திய வம்சாவளியைச் சேர்ந்த 2 வயது குழந்தை” – சிகிச்சைக்காக சிங்கப்பூரில் திரட்டப்பட்ட 16 கோடி

“எங்கள் சமீபத்திய விளம்பரப்படம் ஒன்றால் நமது உள்ளூர் சமூகத்தின் சில உறுப்பினர்களுக்கு அவர்கள் உணர்வுகளை புண்படுத்தக்கூடியதாக இருந்ததை அறிவோம். இதனால் ஒரு தவறை செய்துவிட்டோம் என்று உணர்ந்து நாங்கள் அந்த வீடியோவை முற்றிலும் நிக்கியுள்ளோம். புதுமை மற்றும் வளர்ச்சி என்பது பன்முகத்தன்மை மற்றும் Inclusivityஐ அடிப்படையாக வைத்தே வளர்கின்றது என்பதை சாம்சங் அறியும்”. “ஆகையால் எதிர்வரும் எங்கள் படைப்புகளில் நாங்கள் விழிப்புடன் இருப்போம்” என்று கூறியுள்ளது சாம்சங்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts