சிங்கப்பூரைத் மையமாக கொண்ட கிரிப்டோகரன்சி பரிமாற்ற தளமான Crypto.com ஹேக் செய்யப்பட்டுள்ளதை அந்நிறுவனம் உறுதி செய்துள்ளது.
Crypto.com என்பது சிங்கப்பூரில் உள்ள கிரிப்டோகரன்சி பரிமாற்ற App ஆகும். இந்த ஆப்-ல் தற்போது 10 மில்லியன் பயனர்கள் மற்றும் 3,000 பணியாளர்கள் உள்ளனர்.
இந்த நிறுவனம் ஆரம்பத்தில் பாபி பாவோ, கேரி ஓர், கிரிஸ் மார்சலெக் மற்றும் ரஃபேல் மெலோ ஆகியோரால் 2016 இல் “மொனாக்கோ” என்ற பெயரில் நிறுவப்பட்டது. 2018 ஆம் ஆண்டில், கிரிப்டோகிராஃபி ஆராய்ச்சியாளரும் பேராசிரியருமான மாட் பிளேஸ் வாங்கிய பிறகு, அந்நிறுவனம் Crypto.com என பெயர் மாற்றப்பட்டது. இது அந்நிறுவனத்தின் கடந்தகால வரலாறு.
இந்நிலையில் தான் Crypto.com தற்போது ஹேக் செய்யப்பட்டுள்ளது. இதனால், அதன் 483 பயனர்கள் பாதிக்கப்பட்டிருப்பதாக அந்நிறுவனமே ஒப்புக்கொண்டுள்ளது. தங்களது சமூக தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், ‘ஜனவரி 17 அன்று, “சிறிய எண்ணிக்கையிலான பயனர்கள்” தங்கள் கணக்குகளில் அங்கீகரிக்கப்படாத தொகையை எடுத்திருப்பதை (unauthorised withdrawals) அறிந்துள்ளோம்’ என்று கூறியிருக்கிறது. .
இந்த அங்கீகரிக்கப்படாத withdrawals மொத்தம் 4,836.26 Ethereum ஆகும். Ethereum என்பது டிஜிட்டல் பணப்புழக்கம், உலகளாவிய பணப்பரிமாற்றம் மற்றும் பயன்பாடுகளுக்கான ஒரு தொழில்நுட்பமாகும். அதேபோல், அங்கீகரிக்கப்படாத withdrawals-ல் 443.93 Bitcoin மற்றும் பிற நாணயங்களில் தோராயமாக US$66,200-ம் அடங்கும்.
நேற்று(ஜன.21) வெள்ளிகிழமை Exchange Rate-ன் படி, இது சுமார் US$31 மில்லியன் (S$41.7 மில்லியன்) தொகை மதிப்பு கொண்டதாகும். அதாவது இந்திய மதிப்பில் தோராயமாக 230 கோடி ரூபாய்.
கடந்த திங்களன்று சில கணக்குகளில் அங்கீகரிக்கப்படாத செயல்பாடுகள் நடந்திருப்பதை Crypto.com கண்டறிந்துள்ளது. பயனர்கள் வழங்கிய two-factor authentication (2FA) இல்லாமலேயே பரிவர்த்தனைகள் அங்கீகரிக்கப்பட்டிருக்கிறது.
இதையடுத்து “Crypto.com நிறுவனம், விசாரணையைத் தொடங்கியதனால், அனைத்து டோக்கன்களுக்குமான withdrawals-களை உடனடியாக நிறுத்தி வைத்தது. சிக்கலைத் தீர்க்க 24 மணிநேரமும் வேலை செய்துள்ளதாகவும், எந்த வாடிக்கையாளர்களும் நிதியை இழக்கவில்லை” என்று அந்நிறுவனம் கூறியுள்ளது.
“பெரும்பாலான பாதிப்புகளில்” அங்கீகரிக்கப்படாத withdrawals தடுக்கப்பட்டது, மற்ற பாதிப்புகளை சந்தித்த வாடிக்கையாளர்களுக்கு முழுமையாக திருப்பிச் செலுத்தப்படும் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
மேலும், பாதிக்கப்பட்ட கணக்குகள் “முழுமையாக மீட்டெடுக்கப்பட்டன” என்றும் கூறியுள்ளது.