TamilSaaga

“வெளிநாட்டிலிருந்து தமிழகம் திரும்பியவருக்கு நடுவானில் நேர்ந்த சோகம்” : அதிகாலையில் பரபரப்பான சென்னை Airport

நேற்று புதன்கிழமை ஜனவரி 19ம் தேதி துபாயில் இருந்து சென்னை புறப்பட்ட விமானதோ பயணித்த பயணி நடுவானில் இறந்த சம்பவம் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. நேற்று அதிகாலை துபாயில் இருந்து தமிழகத்தின் தலைநகர் சென்னைக்கு புறப்பட்ட விமானத்தில் தான் இந்த சோக நிகழ்வு ஏற்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படியுங்கள் : “சிங்கப்பூரில் நாய்களை தத்தெடுத்து வளர்த்துவருபவரா நீங்கள்?” – நமது அரசு வெளியிட்ட முக்கிய Update

நாகப்பட்டினத்தைச் சேர்ந்தவராக கருதப்படும் மதர்ஷா பஷீர் என்பவர் துபாயில் இருந்து சென்னை வரும் விமானத்தில் பயணித்துள்ளார். விமானம் புறப்பட்ட சில மணி நேரத்தில் நடுவானில் விமானம் பறந்துகொண்டிருந்த நேரத்தில் மதர்ஷா பஷீர் அவர்களுக்கு கடுமையான நெஞ்சுவலி ஏற்பட்டு துடித்துள்ளார். இறுதியில் அவர் தனது இருக்கையில் இருந்தவாறே மயங்கி விழுந்துள்ளார். உடல் இருந்த பயணிகள் மற்றும் விமான பணிப்பெண்கள் அவருக்கு முதலுதவி அளித்துள்ளார்.

இதனையடுத்து அந்த விமானத்தின் விமானி சென்னை விமான நிலையத்தை தொடர்புகொண்டு தகவலை அளித்த நிலையில், சென்னை விமான நிலையத்தில் அந்த விமானம் தரையிறங்க முன்னுரிமை அளிக்கப்பட்டது. இதனையடுத்து அதிகாலை 4.30 மணியளவில் அந்த விமானம் சென்னை பன்னாட்டு விமானநிலையத்தில் தரையிறங்கியது. அங்கு தயார் நிலையில் இருந்த ​​​​மருத்துவக் குழு விமானத்திற்குள்ளே உள்ளே விரைந்து வந்து மயங்கிய நிலையில் இருந்த மதர்ஷா பஷீர் அவர்களுக்கு தேவையான சிகிச்சைகளை வழங்க தயாரானது.

இதையும் படியுங்கள் : “வலி தாங்காமல் கத்திய சிறுமி” : வளர்ப்பு மகளுக்கு பாலியல் தொல்லை – தந்தைக்கு சிங்கப்பூர் நீதிமன்றம் அளித்த “தரமான தண்டனை”

ஆனால் மாரடைப்பு காரணமாக அவர் ஏற்கனவே இறந்துவிட்டதைக் கண்ட குழு கடும் சோகத்தில் ஆழ்ந்தது. அவரது உடலை பிரேத பரிசோதனைக்கு அனுப்பிய பிறகு இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவும் செய்யப்பட்டுள்ளது. அவருடைய உறவினர்கள் அங்கு வந்துள்ளார்களா அவரது உடல் அவரது சொந்தங்களிடம் வழங்கப்பட்டுவிட்டதாக என்பது குறித்து தகவல் ஏதும் வெளியாகவில்லை. அவர் வந்த விமானம் மீண்டும் காலை 5.30 மணிக்கு துபாய் திரும்பவிருந்த நிலையில் சற்று தாமதமாக காலை 7 மணிக்கு புறப்பட்டது.

47 வயது என்று அறியப்பட்ட மதர்ஷா பஷீர் நாகையை சேர்ந்தவர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. விரைவில் இது குறித்து கூடுதல் தகவல் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts