TamilSaaga

வெளிநாடுகளில் உள்ள சிங்கப்பூரர்கள்: பாஸ்போர்ட் விண்ணப்பிப்பது எப்படி? – தேவையான Links உள்ளே

வெளிநாடுகளில் வாழும் சிங்கப்பூர் நாட்டவர்க்கு, சிங்கப்பூர் பாஸ்போர்ட் தேவைப்படுமாகின், இரண்டு வழிகள் விண்ணப்பிக்கலாம். நேரடியாக சிங்கப்பூர் ஹை கமிஷன் அல்லது கன்சுலட் சென்று விண்ணப்பிக்கலாம் அல்லது ஆன்லைன் முறையிலும் விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் மூலம் புதிய கடவுச்சீட்டு விண்ணப்பிப்பது அல்லது பழைய கடவுச்சீட்டை புதுப்பிப்பது போன்ற சேவைகளைப் பெறுவதற்கு இந்த இணையதளத்தை பயன்படுத்தவும்.

இதையும் படியுங்கள் : “சிங்கப்பூரில் நாளை முதல் குழந்தைகளுக்கு பெருந்தொற்று தடுப்பூசி”

முதலில் உங்கள் டிஜிட்டல் புகைப்படத்தையும், கிரெடிட் கார்டு அட்டையையும் (அதாவது வங்கியின் கடன் அட்டையும்) தயாராக வைத்துக் கொள்ளவும். நீங்கள் விண்ணப்பிக்கும் போது நீங்கள் வசிக்கும் முழு விலாசத்தை தெரிவிக்க வேண்டும். புதிய கடவுச்சீட்டை டெல்லியில் உள்ள சிங்கப்பூர் ஹை கமிஷன் அலுவலகத்திலிருந்து பெற்றுக்கொள்ளலாம்.

இந்த சேவைக்கு சுமார் மூன்று வாரங்கள் தேவைப்படலாம். புதிய கடவுச்சீட்டு தயாராகியவுடன் ஹை கமிஷன் அலுவலகத்திலிருந்து உங்களுக்கு தகவல் தெரிவிக்கப்படும். அதன் பின்னர் தேவையான ஆவணங்களுடன் நீங்கள் நேரில் சென்று புதிய கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ளலாம். பழைய கடவுச்சீட்டு ஏதேனும் இருப்பின், அது ரத்து செய்யப்பட்டு உங்களிடமே அளிக்கப்படும்.

நேரில் சென்று விண்ணப்பித்தல்

நேரில் சென்று விண்ணப்பிக்கும் முறையில் அனைத்து ஆவணங்களும் சமர்ப்பிக்கப்பட்ட பிறகு, புதிய கடவுச்சீட்டை பெறுவதற்கு மூன்று முதல் நான்கு வாரங்கள் ஆக வாய்ப்பு உண்டு.புதிய கடவுச்சீட்டு தயாராகியவுடன் சிங்கப்பூர் ஹை கமிஷன் அலுவலகத்திலிருந்து உங்களுக்கு தகவல் தெரிவிக்கப்படும். அதன் பின்னர் தேவையான ஆவணங்களுடன் நீங்கள் நேரில் சென்று புதிய கடவுச்சீட்டை பெற்றுக்கொள்ளலாம்.

தேவைப்படும் ஆவணங்கள்

  1. தற்சமயம் நீங்கள் பயன்படுத்தும் சிங்கப்பூர் பாஸ்போர்ட் அல்லது கடவுச்சீட்டு – அசல்(சேதமடைந்து இருந்தாலும் பரவாயில்லை)
  2. கடவுச்சீட்டு தொலைந்து விட்டதாக காவல் துறையிடமிருந்து பெற்ற அறிக்கை அல்லது அறிவிக்கப்பட்ட சட்டப்பூர்வ அறிவிப்பு ஆவணம்
    3 சமீபத்தில் அதாவது மூன்று மாதங்களுக்குள்ளாக எடுக்கப்பட்ட விண்ணப்பதாரரின் தெளிவான வண்ணப் புகைப்படம் 35 மிமீ பரப்பளவு 45 மிமீ உயரமும், ஓரங்களில் எல்லைகள் ஏதும் இல்லாமலும் இருத்தல் வேண்டும்.
  • நீங்கள் புகைப்பட கருவியை நேராக பார்ப்பது போலும், உங்கள் முழு முகமும் தெரிவதுபோலும் புகைப்படம் அமைய வேண்டும்.
    *புகைப்படத்தில் உங்கள் முகத்தின் அளவு அதாவது தலை நெற்றி முதல் வாய் க்கு கீழ் வரை சுமார் 25 மீ முதல் 35 வரை அமைதல் வேண்டும்.
    *புகைப்படத்தில் நீங்கள் எவ்வித தலை கவசமும் அணியாமல் கண்கள், தோள்கள் மற்றும் இதர முக அம்சங்கள் தெளிவாக தெரியும் வகையில் தோற்றமளிக்க வேண்டும். ஒருவேளை உங்கள் மத அல்லது இன வழக்கப்படி நீங்கள் தலைக்கவசம் கண்டிப்பாக அணிய வேண்டும் என்ற கட்டாயம் இருந்தால் அப்போதும் கூட உங்கள் முக அம்சங்கள் குறிப்பாக கண்கள் மற்றும் தோள்கள் தெளிவாக தெரியும் வகையில் இந்த புகைப்படம் அமைதல் வேண்டும்.
    *நீங்கள் கண்ணாடி அணிபவராக இருந்தால் அப்போதுகூட உங்கள் கண்கள் தெளிவாக தெரிய வேண்டும் புகைப்படம் எடுப்பதனால் ஏற்படும் பிளாஷ் அல்லது ஒளிரும் பிரதிபலிப்பு எதுவும் கண்ணாடியில் தெரியக்கூடாது. கண்கள் தெளிவாக தெரிய வேண்டும்.
    கண்ணாடியின் சட்டகம் உங்கள் கண்களை எவ்வகையிலும் மறைப்பது போல் அமையக்கூடாது.

*புகைப்படம் சரியான வழி வெளிச்சத்தில் எடுக்கப்படவேண்டும். எவ்வித ஒளிரும் பிரதிபலிப்பு அதாவது கிளாஸ் ரிப்லக்ஷன் அல்லது நிழல் அல்லது சிவந்த கண்கள் போன்ற பிழைகள் ஏதுமின்றி, உங்கள் உண்மையான தோற்றத்தை பிரதிபலிப்பது போல் அமைய வேண்டும்.

*வெள்ளை நிற பின்னணியில் புகைப்படத்தை எடுத்தல் வேண்டும் எனினும் உங்கள் உடை வெண்ணிறமாக இருந்தால் சாம்பல் நிறப் பின்னணியில் நீங்கள் புகைப்படத்தை எடுத்துக் கொள்ளலாம். புகைப்படத்தில் நீங்கள் மட்டுமே இருக்க வேண்டும் மேஜைகளோ பொம்மைகளோ மற்றவர்களோ அருகில் இல்லாதவாறு புகைப்படம் அமைதல் வேண்டும்
உயர்தரமான காகிதத்தில், எவ்விதமான வெளிப்புற பூச்சும் இல்லாத வகையில் இந்த புகைப்படம் இருக்க வேண்டும்.

4.சிங்கப்பூர் பயோமெட்ரிக் பாஸ்போர்ட் விண்ணப்ப படிவம் பூர்த்தி செய்யப்பட வேண்டும் (படிவம் IMM(E)11(OS)) மேலும் தகவல்களுக்கு உரிய படிவங்கள் பற்றி தெரிந்துகொள்ள இந்த இணைப்பை பயன்படுத்தவும்

5.மற்ற ஆவணங்களை பற்றிய கூடுதல் விவரங்களுக்கு, இந்த இணைப்பை பயன்படுத்தவும்.

6.தேசிய பதிவு அடையாள அட்டையின் நகல்

7.உங்கள் கணவரின் அல்லது குடும்ப பெயரை சேர்க்க வேண்டும் என்றால், அதற்குரிய சட்ட பூர்வ அறிவிப்பு ஆவணமான திருமண சான்றிதழை சேர்க்க வேண்டும். மேலும் தகவல்களுக்கு இந்த இணைப்பை பயன்படுத்தவும்.

8. உங்கள் பெயரில் ஏதேனும் மாற்றம் செய்திருந்தால் அல்லது செய்ய விருப்பப்பட்டால் அதற்குரிய சட்டபூர்வமான அறிவிப்பை சமர்ப்பிக்க வேண்டும் மேலும் தகவல்களுக்கு இந்த இணைப்பை பயன்படுத்தவும்.

9. நாட்டைவிட்டு வெளியேறுவதற்கான அசல் அனுமதி சான்று ஆவணம் ( அதாவது ஆண்களுக்கு 16.5 வயதிற்கு மேற்பட்ட ஆண்களுக்கு)

10. உங்கள் கடவுச் சீட்டு காலாவதியாகி மூன்று வருடங்களுக்கு மேல் இருந்தால் இந்த இணைப்பை பயன்படுத்தி கூடுதல் ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.

பாஸ்போர்ட் அல்லது கடவுச்சீட்டு முதல் முறை விண்ணப்பிப்பதற்கான /புதுப்பிப்பதற்கான தொகை – ₹4000

பாஸ்போர்ட் அல்லது கடவுச்சீட்டை முதல்முறையாக தொலைத்து இருந்தாலோ அல்லது சேதப்படுத்தி இருந்தாலும், கட்டவேண்டிய தொகை- ₹2500

பாஸ்போர்ட் அல்லது கடவுச்சீட்டை இரண்டாவது முறையாகவும் அல்லது இரண்டிற்கும் மேற்பட்ட முறையாக தொலைத்து இருந்தாலோ அல்லது சேதப்படுத்தி இருந்தாலோ கட்டவேண்டிய தொகை-₹5000

பாஸ்போர்ட் தொலைந்ததை பற்றி காவல்துறையிடம் தெரிவிக்காமல் , அதற்குரிய அறிக்கை பெறாமல் இருந்தால் கட்டவேண்டிய தொகை-₹250
(கட்டணங்கள் முன்னறிவிப்பின்றி மாற வாய்ப்புகள் உண்டு)

1.புதிய விண்ணப்பதாரருக்கு கடவுச்சீட்டு ஐந்து வருடங்களுக்கு வழங்கப்படும். புதுப்பிப்பவர்களுக்கு ஐந்து வருடங்கள் மற்றும் மீதமுள்ள செல்லுபடியாகும் காலம் வரை நீட்டிக்கப்படும். 9 மாதங்களுக்கு மேல் இருந்தால் ஐந்து வருடங்கள் 9 மாதங்கள் என்று நிர்ணயிக்கப்படும் , இல்லை எனில் ஐந்து வருடங்கள் என்று அறிவிக்கப்படும்.

2. முறையாக சமர்ப்பிக்கப்பட்ட விண்ணப்ப படிவங்களை பெற்று மூன்று முதல் நான்கு வாரங்களுக்குள் பாஸ்போர்ட் வழங்கப்படும். இந்த பாஸ்போர்ட் சிங்கப்பூரிலிருந்து ஒப்புதல் அளிக்கப்படுவதால், இந்த மொத்த செயல்பாட்டிற்கு தேவையான கால அவகாசத்தை நாம் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

3. புதிய பாஸ்போர்ட் தயாராகியவுடன் உங்களுக்கு தகவல் தெரிவிக்கப்படும்.அந்நேரத்தில் தேவையான ஆவணங்களை எடுத்துக்கொண்டு சென்று பாஸ்போர்ட்டை பெற்று வரலாம்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts