TamilSaaga

“என் கைக்குழந்தையோட சேர்த்து 5 பேரையும் கொன்னுட்டாங்க” : நாட்டுக்காக போனேன்.. ஆனா குடும்பத்தையே பறிகொடுத்துட்டேன் – கலங்கும் உக்ரைன் வீரர்

உலகமே ஒரு முடக்க நிலையில் சிக்கித்தவித்து வரும் இந்த நேரத்தில் ரஷ்ய உக்ரைன் போர் மக்களை பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் 30 வயதான உக்ரைனிய போலீஸ் Oleg Fedko உக்ரைன் மீதான ரஷ்ய படையெடுப்பிற்கு மத்தியில் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தபோது, தனது முழு குடும்பத்தையும் இழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த பிப்ரவரி 24, வியாழன் அன்று ரஷ்ய துருப்புக்கள் உக்கிரைன் நகருக்குள் நுழைந்தபோது, ​​இறந்த அந்த ஐந்து குடும்ப உறுப்பினர்கள் உக்ரைனில் உள்ள முக்கிய நகரமான கெர்சனில் இருந்து இரண்டு கார்களில் பாதுகாப்பான இடத்திற்கு தப்பிச் சென்றுள்ளனர்.

இதுதான் “அல்டிமேட் Update” : அனைத்து இந்திய நகரங்களுக்கும் VTL விரிவுபடுத்தப்படுகிறது – சிங்கப்பூர் CAAS அளித்த “Green Signal”

ரஷ்ய துருப்புக்கள் அந்த கார்கள் மீது நடத்திய துப்பாக்கிச் சூட்டில், Olegன் 27 வயது மனைவி, ஆறு வயது மகள் மற்றும் அவர்களது கைக்குழந்தை ஆகியோர் கொல்லப்பட்டனர். 50 வயதை தாண்டிய Olegன் தாய் மற்றும் தந்தையும் இந்த துப்பாக்கி சூட்டில் கொல்லப்பட்டுள்ளனர். Olegன் சகோதரர், Denis Fedko, இந்த சம்பவம் குறித்து உக்ரைனிய செய்தி நிறுவனமான zaxid.net உடன் இந்த நிகழ்வை பகிர்ந்துள்ளார். துப்பாக்கி சூடு நடத்தப்பட்ட அன்றைய தினம் அவர், அவர்களின் தாயுடன் தொலைபேசியில் பேசியதாகவும், அவரது தாயார் கத்துவதையும், குழந்தைகள் அழுவதையும் கேட்டதாகவும், அவர் கூறினார்.

“மேலும் ரஷ்ய துருப்புக்களால் கொல்லப்பட்ட அவரது உறவினர்களின் உடல்களை உக்ரைன் காவல்துறையால் மீட்க முடியவில்லை” என்று zaxid.net செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த சம்பவத்தை தி கார்டியன் மற்றும் நியூயார்க் போஸ்ட் உள்ளிட்ட சர்வதேச ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளதும் குறிப்பிடத்தக்கது.

“சிங்கப்பூரில் வேலைவாய்ப்பு மோசடியில் சிக்கிய 4722 பேர் : திடுக்கிட வைக்கும் வேலை வாய்ப்பு மோசடி – அமைச்சர் எச்சரிக்கை

உக்ரைன் நாட்டின் கெர்சன் தான் ரஷ்யாவிடம் சிக்கிய முதல் பெரிய நகரம் என்று தகவல்கள் தெரிவிக்கின்றது. கெர்சனில் நடந்த தீவிரமான சண்டைக்குப் பிறகு கடந்த வார போரில் 300 உக்ரேனிய பொதுமக்கள் மற்றும் போராளிகள் இறந்ததாக தி நியூயார்க் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts