TamilSaaga

“என் சாபம் சும்மா விடாதுடா பாவிகளா” – சிங்கப்பூரில் எட்டு ஆண்டுகால வாழ்க்கையை நிறைவு செய்த தமிழக ஊழியரின் புலம்பல்

வெளிநாட்டில் வேலை என்றாலே, அதிலும் நமது சிங்கப்பூர் போன்ற நாடுகளில் வேலை பார்க்கிறவர்கள் என்றாலே ஒரு தனி மரியாதையை தான். Hi-fi வாழ்க்கை, பன்னாட்டு உணவு, பொழுதுபோக்க எண்ணற்ற இடங்கள் என்று ஒரு சொகுசு வாழ்க்கையைத் தான் சிங்கப்பூர் உள்ளிட்ட பிற நாடுகளில் பணிபுரியும் பிற நாட்டு தொழிலாளர்கள் வாழ்கின்றனர் என்று நம்மில் பலர் நினைப்பதுண்டு. ஏறக்குறைய அது உண்மை தான் என்றபோது, எவ்வளவு தான் சொகுசு வாழ்க்கை வாழ்ந்தாலும் தாய் மண்ணில் கால்பதித்து தன் வீட்டில் உணவும் உண்ணும் அந்த சுகம் எங்கும் கிடைக்காது.

இதுதான் “அல்டிமேட் Update” : அனைத்து இந்திய நகரங்களுக்கும் VTL விரிவுபடுத்தப்படுகிறது – சிங்கப்பூர் CAAS அளித்த “Green Signal”

குடிப்பது கூழாக இருந்தாலும் அதை தன் வீட்டில் குடிக்கும்போது அதன் ருசி அதிகம் தானே, ஆனால் அதை சற்று ஒதுக்கி வைத்துவிட்டு, தான் என்ன வேதனை அடைந்தாலும் அதை பொருட்படுத்தாமல் பொருளாதார ரீதியாக தனது குடும்பம் இனிமையாக வாழவேண்டும் என்ற ஒரே காரணத்திற்காக கடல் கடந்து சென்று நமது சிங்கப்பூர் போன்ற பல நாடுகளில் வேலை பார்த்து வருகின்றனர் பல்லாயிரம் தொழிலாளர்கள். இந்நிலையில் தனது வெளிநாட்டு வாழ்க்கை குறித்து சிங்கப்பூர் வாழ் தமிழர் ஒருவர் தனது அனுபவத்தை பகிர்ந்துள்ளார்.

காளிதாஸ் என்ற அந்த ஊழியர் வெளியிட்ட தனது முகநூல் பதிவில் “இன்றுடன் நான் வெளிநாடு வாழ்க்கையை ஆரம்பித்து எட்டு ஆண்டுகளாகிவிட்டது. எனது வாழ்வில் வெளியூர் பயணம் கூட செய்யாத என்னை வெளிநாட்டு வாழ்க்கைக்கு தள்ளிவிட்ட மகாப்பாவிகளே நீங்கள் நல்லா இருங்கடா.. என் குடும்பத்தை பிரிந்து நான் படும் மன வேதனை உங்களை சும்மா விடாதுடா அயோக்கியப் பயலுகளே..” என்று நகைப்போடு தனது தனிமையான வாழ்கை குறித்து கூறியுள்ளார்.

“என் கைக்குழந்தையோட சேர்த்து 5 பேரையும் கொன்னுட்டாங்க” : நாட்டுக்காக போனேன்.. ஆனா குடும்பத்தையே பறிகொடுத்துட்டேன் – கலங்கும் உக்ரைன் வீரர்

என்ன சம்பளம் வாங்கினால் என்ன? தனிமை என்ற அந்த ஒரு விஷயத்தை அனுபவிப்பது மிகக்கொடுமை. காளிதாஸ் தனது பதிவில் கூட குறிப்பிட்டது தனது குடும்பத்தை பிரிந்து வாழும் அந்த வாழ்க்கையை பற்றித்தான். ஆனால் என்றாவது ஒரு நாள், என் குடும்பத்தோடு ஒரு நிம்மதியான வாழ்க்கையை சந்தோஷமாக வாழப்போகிறேன் என்ற நம்பிக்கையோடு தான் காளிதாஸ் போன்ற பல்லாயிரம் தொழிலாளர்கள் நமது சிங்கப்பூர் போன்ற பல நாடுகளில் வேலை செய்து வருகின்றனர். உண்மையில் அந்த தொழிலாளர்கள் ரியல் ஹீரோஸ் தான்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts