மனிதனின் வாழ்க்கை என்றோ ஒரு நாள் முடியும் என்பது யாராலும் மாற்ற முடியாத ஒன்று தான் என்பதை நாம் அனைவரும் அறிவோம். பிறப்பிக்கும் இறப்புக்கும் இடையே நாம் வாழ்கின்ற அந்த வாழ்க்கை தான் நமக்காக அர்த்தத்தை தருகின்றது. ஒரு மனிதனின் இறப்பு எவ்வளவு துயரமானது என்பதை இதை வாசிக்கும் நாம் அனைவரும் நிச்சயம் அறிந்திருப்போம். ஆனால் ஒரு சில வெளிநாட்டு வாழ் ஊழியர்களின் வாழக்கை அவர்கள் படும் துன்பம் இறுதியில் அவர்கள் மரணம் எவ்வளவு கொடுமையானது என்பதை பலரின் மரணம் நமக்கு நினைவுபடுத்திக்கொண்டே இருக்கின்றது.
அண்டை நாடான இந்தியாவில் உள்ள சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் வட்டம் இளங்குடியை சேர்ந்த கணபதி என்பவரின் மகன் செல்வம் மலேசியாவின் பணி செய்து வந்த நிலையில் அவர் காலமாகியுள்ளார். ஆனால் சொந்த மண்ணில் கூட அடக்கம் செய்யமுடியாமல் அன்னாரின் உடல் மலேசியாவிலேயே சில நல்ல உள்ளங்கள் மத்தியில் அடக்கம் செய்யப்பட்டுள்ளது பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஒரு மனிதன் தனது மரணப்படுக்கையில் கூட சொந்தங்களை பார்க்கமுடியாமல் உலகின் எதோ ஒரு திசையில் தாய் மண்ணை கூட சீண்டாமல் இறந்து மண்ணுக்குள் போவது கொடுமையின் உச்சம் என்றே கூறலாம். 48 வயதாகும் செல்வம் மலேசிய நாட்டில் உள்ள பந்திங் என்ற இடத்தில் கடந்த 05.02.2022 அன்று உடல்நலக்குறைவால் காலமானார். அவருடைய உடல் சொந்த ஊருக்கு கொண்டுசெல்லமுடியாத நிலை ஏற்படவே குடும்பத்தினர் உடலை மலேசியாவிலேயே அடக்கம் செய்ய ஒப்புக்கொண்டனர்.
இந்நிலையில் செல்வத்தின் குடும்பத்தார் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்கி அவரது திரு உடல் மலேசியாவில் நல்லடக்கம் செய்யப்பட்டது. சுமார் 19 நாள் காத்திருப்புக்கு பின் அன்னாரது உடல் நேற்று 24.02.2022 அன்று மதியம் 2 மணியளவில் செராஸ் மின் மயானத்தில் நல்ல முறையில் தகனம் செய்யபட்டது. அயலக குழு தான் அனைத்து இறுதி சடங்குகளையும் செய்துள்ளது, அதற்கான செலவுகளை குடும்பத்தினர்கள், உறவினர்கள் ஏற்றுகொண்டது குறிப்பிடத்தக்கது.
செல்வத்தின் குடும்பத்தினர் அயல குழுவிற்கு தங்கள் நன்றிகளை உரித்தாகியுள்ளனர். இறுதி நிமிடம் வரை உடன் இருந்த அனைவருக்கும் தங்கள் நன்றிகளை கூறியுள்ளனர்.