TamilSaaga

சொந்த ஊர் திரும்ப ஏர்போர்ட் சென்ற தமிழக ஊழியரை காணவில்லை – அதிகம் ஷேர் செய்து கண்டுபிடிக்க உதவ வேண்டுகிறோம்

மலேசியாவைச் சேர்ந்த தமிழக சேவை குழு (Tamilnadu Workers Helping Group Malaysia) நேற்று (பிப்.16) அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், “காரைக்குடி கால்வாய்பொட்டல் பகுதியைச் சேர்ந்த த/பெ முத்தையா என்பவர் மலேசியாவில் கோலாலம்பூர் லெபு அம்பாங் பகுதியில் கடைசியாக இருந்தார். அவர் 17/07/2021 அன்று தாயகம் செல்ல இருந்த நிலையில் 14/07/2021 அன்று முதல் அவரை காணவில்லை.

அவர் முன்பு பினாங் மற்றும் ரவாங் பகுதியில் வேலை செய்து வந்தார். இவரை காணவில்லை என்பது பற்றிய புகார் மலேசிய காவல்துறை மற்றும் இந்திய தூதரகத்திலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

மேலும் படிக்க – “பிறந்தது விடிவு காலம்”.. VTL நடைமுறைகளை எளிதாக்கும் சிங்கப்பூரின் “அதிகாரப்பூர்வ” அறிவிப்பு – சரியான நேரத்தில் அரசு எடுத்த கச்சிதமான முடிவு

இவரை காணாமல் இவரது மனைவி, பிள்ளைகள் மிகுந்த மனவேதனையில் உள்ளனர். அவர்களுக்கு நீங்கள் உதவி செய்ய நினைத்தால், அவரைப் பற்றிய தகவல் தெரிந்தால் இந்திய தூதரகம் அல்லது கீழ் உள்ள எண்ணில் தயவு செய்து தொடர்பு கொள்ளவும். அல்லது இந்த பதிவை பகிர்ந்து உதவி செய்யுங்கள்”

என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

அமைப்பின் தொடர்புக்கு:

காளையப்பன் – 0189685119

ஜெயசீலன் – 0166448256

பூமிநாதன் – 0182763937

ராஜா – 0182311976

மேலும் தொடர்புக்கு – 006-0136933678 – மூர்த்தி

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்

Related posts