TamilSaaga

சும்மா சாட்டிங் செய்ய தான வந்தோம்… கிரெடிட் கார்டுல காசு பிடிங்குவீங்களா… கடுப்பான பயனர்கள்… வைரலாகும் Bondee ஆப்!

Bondee: சிங்கப்பூரை தளமாகக் கொண்டு இயங்கும் சமூக வலைத்தளமான செயலி Bondee. வளர்ந்து வரும் இந்த ஆப்பில் சில நாட்கள் பயன்பாட்டுக்கு பிறகு, கிரெடிட் கார்டு தகவலை தவறாகப் பயன்படுத்துவாக குற்றச்சாட்டுகள் இந்த வார தொடக்கத்தில் எழுந்தது. ஆன்லைனில் இந்த பிரச்னை எழுந்ததையடுத்து, bondeeஐ பயன்படுத்துவதற்கு பயனர்கள் தயங்கி இருக்கின்றனர்.

ஆன்லைன் கேமிங் மற்றும் மெசேஜிங் ஆகியவற்றின் அடிப்படையில் மெட்டாவர்ஸ் கீழ் இயங்கும் இந்த ஆப், கூகுள் ப்ளே ஸ்டோரில் ஒரு மில்லியன் பதிவிறக்கங்களைத் தாண்டி இருக்கிறது. ஜனவரி 15 ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் ஆப் ஸ்டோர் தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்தது. இந்த ஆப்பில் 3D அவதாரினை ஸ்பெஷலாக பயன்படுத்த வாடிக்கையாளர்களால் முடியும்.

இதையும் படிங்க: பைலட்டுக்கு டைம் தெரியாதோ… சிங்கப்பூர் செல்ல ஆசையாக பஞ்சாப் விமான நிலையம் வந்த பயணிகள்… காக்காவை கூட காணாமல் கடுப்பான சம்பவம்… Scoot செய்த காமெடி!

இந்நிலையில், Bondee செயலியை இன்ஸ்டால் செய்த பிறகு அங்கீகரிக்கப்படாத வங்கிப் பரிமாற்றங்களின் ஸ்கிரீன் ஷாட்களை பயனர்கள் சமூக வலைத்தளத்தில் வெளியிட்டனர். அதன் பிறகு, Bondee இன் Data policy குறித்த ஊகங்கள் சமூக ஊடகங்களில் வெளிவந்தன.

சில பயனர்கள் Bondeeஇன் ஸ்டைல் சீன ஆப்பான Zheliஐப் போலவே இருந்தது. இது ஒரு காலத்தில் சீன தொழில்நுட்ப நிறுவனமான True.lyக்கு சொந்தமானது. Zheli அதன் Data policy நடைமுறைகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்ட பிறகு, 2022ஆம் ஆண்டின் தொடக்கத்தில் ஆப் ஸ்டோர்களில் இருந்து அகற்றப்பட்டது. Metadream இன் படி, True.lyஇன் உரிமைகள் 2022இல் Bondeeஆல் வாங்கப்பட்டது.

கிரெடிட் கார்டு விவரங்களைப் பயன்படுத்துவது குறித்த குற்றச்சாட்டுகளுக்கு பதிலளித்த Bondeeயின் தாய் நிறுவனமான மெட்டாட்ரீம் வெள்ளிக்கிழமை இரவு ஒரு அறிக்கையில் இந்த குற்றச்சாட்டுகள் தவறானவை என்றும் ஸ்டார்ட்-அப் நிறுவனம் கிரெடிட் கார்டு தகவல்களை சேகரிக்கவில்லை என்றும் கூறியது.

இதையும் படிங்க: பாத்து பக்குவமா சிங்கப்பூரில் இருந்து விமானம் ஏறிடுறோம்.. ஆனா, நம்ம கூட்டிட்டு வரும் Pilotஸ்… அவங்களுக்கும் பிரச்னை இருக்குனு யோசிச்சிருக்கோமா… இப்டிலாமா இருக்கு! அடியாத்தி!

Metadream இன்ஸ்டாகிராமில் கூறியதாவது, “சமீபத்தில், Bondee தளத்தைப் பயன்படுத்துவதன் மூலம் Bondee பயனர்களின் கிரெடிட் கார்டு தகவல்கள் கசிந்ததாக பல்வேறு சமூக ஊடக தளங்களில் வதந்திகள் பரவி வருவது எங்கள் கவனத்திற்கு வந்துள்ளது. மெட்டாட்ரீம் தற்போது பயனர்களின் கிரெடிட் கார்டு தகவல் அல்லது வேறு எந்த நிதித் தகவலையும் சேகரிக்காததால், இதுபோன்ற வதந்திகள் தவறானவை மற்றும் பொய்யானவை என்பதை எங்கள் பயனர்களுக்கு உறுதியளிக்க விரும்புகிறோம் என்றார்.

Metadream தனது சேவைகள் குறித்து தவறான தகவல்களை பரப்புபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியுள்ளது. அறிக்கை வெளியிடப்பட்ட பிறகு, Metadreamஇன் data policy நடைமுறைகள் குறித்த கவலை தெரிவித்த பிறகு சமூக ஊடகங்களில் இருந்து சில போஸ்ட்கள் அகற்றப்பட்டன.

Metadream தன்னை ஒரு “independent tech company” என்று தெரிவிக்கிறது. மே 2022ல் True.lyன் உரிமைகளை வாங்கிய, சர்வதேச பயனர்களுக்காக அதன் பயன்பாட்டை மேலும் மேம்படுத்தியது. சிங்கப்பூர், மலேசியா, ஜப்பான் மற்றும் பிற நாடுகளில் ஜனவரி மாதம் Bondee வெளியிடப்பட்டது. பயன்பாட்டிற்கு பயனர்கள் தங்கள் பெயர், identity, password, மொபைல் எண் மற்றும் பிறந்த தேதி ஆகியவற்றை வழங்க வேண்டும். ஆனால் எந்த கிரெடிட் கார்டு தகவலையும் சேகரிக்கவில்லை என்று குறிப்பிட்டு இருக்கிறது.

சிங்கப்பூரின் அனைத்து முக்கியமான செய்திகளையும் தமிழில் தெரிந்து கொள்ள “Tamil Saaga Singapore” facebook பக்கத்தை follow பண்ணுங்க

Related posts