மலேசியாவின் Kajang பகுதியில் ஆதரவற்ற மூவரை தற்போது அந்த பகுதியில் இருந்த சில தமிழர்கள் காப்பாற்றி ஆதரவு அளித்துவரும் சம்பவம் பெரும் மனநெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. மலேசியாவின் புகழ்பெற்ற நகரங்களில் ஒன்றான Kajang பகுதியில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. Pushpa Rani என்பவர் தனது முகநூல் பதிவில் வெளியிட்ட இந்த காணொளியில் இந்த சம்பவம் குறித்து தெளிவாக கூறப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த காணொளியில் முற்றிலும் சிதைந்த வீடு ஒன்றில் எலும்பும் தோலுமாக காணப்படும் மூவர் உள்ளனர். உடைந்த கட்டிலில் உட்காந்திருக்கும் ஒரு மூதாட்டி பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ளார் என்றும் அவருக்கு அருகில் இன்னொரு கட்டிலில் படுத்திருக்கும் மெலிந்த உடல் கொண்ட இன்னொரு மனிதரால் நடக்க முடியாது என்றும் அந்த காணொளியில் அளிக்கப்பட்ட தகவலில் கூறப்படுகிறது. மேலும் அந்த வீடியோவில் மூன்றாவதாக ஒருவர் அந்த மூதாட்டிக்கு அருகில் தரையில் கிடக்கிறார். அவரால் நடக்க முடியும் என்றும் ஆனால் அவர் OKU என்ற Orang Kurang Upaya இயலாமையால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
அவர்களால் தங்களுக்கு என்று சமைத்துக்கொள்ளமுடியாது என்றும், தற்போது அவர்களுக்கு எந்தவித நிதியும் வேண்டாம் என்றும் கூறப்படுகிறது. மாற்றாக அவர்கள் நல்லபடியாக தங்க ஒரு நல்ல இடம் இருந்தால் அதுவே போதுமானதாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது. அதேபோல அவர்களால் தங்களுக்கென்று சமைத்துக்கொள்ளமுடியாத நிலை உள்ளதால் காப்பகங்கள் யாரேனும் உதவினால் பேருதவியாக இருக்கும் என்றும் கூறப்படுகிறது.
இந்த பதிவை முகநூலில் கண்ட பல மலேசிய வாழ் தமிழர்கள் அவர்களுக்கு உதவ தற்போது முன்வந்துள்ளனர். விரைவில் அவர்கள் நல்ல காப்பகத்தில் சேர்க்கப்படுவார்கள் என்று தகவல் வெளியாகியுள்ளது.