TamilSaaga

“இரண்டு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் தொடங்கிய சேவை” : இன்று அதிகாலை ஆஸ்திரேலியா சென்ற சிங்கப்பூர் பயணிகள்

சிங்கப்பூர் முதல் மெல்போர்ன் வரை – ஏறக்குறைய இரண்டு ஆண்டுகளில் முதன்முறையாக இன்று முதல் விமானம் சிங்கப்பூரில் இருந்து ஆஸ்திரேலியா சென்றடைந்தது. ஆஸ்திரேலியா பெருந்தொற்று காரணமாக தனது எல்லைகளை பூட்டப்பட்டிருந்ததால், அங்கு பயணம் செய்வதற்கான திட்டங்களை பாலகின என்பது குறிப்பிடத்தக்கது, அதே நேரத்தில் ஆஸ்திரேலியா தனது எல்லைகளை நியூஸிலாந்து நாட்டிற்கு மூடவில்லை என்பதும் நினைவுகூரத்தக்கது.

ஆஸ்திரேலியாவிற்கு பறக்கும் சிங்கப்பூர் குடிமக்கள் நியூ சவுத் வேல்ஸ் மற்றும் விக்டோரியாவிற்கு சென்ற பிறகு ஒரு ஹோட்டலில் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட வேண்டியதில்லை. சிங்கப்பூர் அல்லாத குடிமக்கள் இந்தத் திட்டத்தின் கீழ் தகுதி பெற மாட்டார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது. “தனிமைப்படுத்தப்படாத பயணத்திற்கு ஆஸ்திரேலியா அனுமதிக்கவில்லை என்றால், நாங்கள் இந்த பயணத்தை மேற்கொண்டிருக்க முடியாது என்று” தனது 27 வயது மகனுடன் சிங்கப்பூரில் இருந்து ஆஸ்திரேலியா சென்ற பயணி ஒருவர் கூறினார்.

இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலையில் தொடங்கப்பட்ட இந்த சேவை மூலம் சிங்கப்பூரில் இருந்து ஆஸ்திரேலியாவிற்கு முதல் விமானத்தில் கிட்டத்தட்ட 200 பயணிகளில் பயணித்தனர். சிங்கப்பூர் நாளிதழ் ஒன்று வெளியிட்ட தகவலின்படி Economy கேபினில் உள்ள 263 இருக்கைகளில் சுமார் 60 சதவீதமும், SQ237-ன் வணிக வகுப்பு கேபினில் உள்ள 40 இருக்கைகளில் 95 சதவீதமும் நிரம்பியிருப்பதை சுட்டிக்காட்டியுள்ளது. ஆகியால் சிங்கப்பூரில் இருந்து ஆஸ்திரேலியா சென்ற முதல் விமானமே ஏறக்குறைய அதன் 70 சதவிகித கொள்ளளவுடன் சென்றுள்ளது.

சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (SIA) மூலம் இயக்கப்பட்ட அந்த விமானம், சாங்கி விமான நிலையத்தில் இருந்து அதிகாலை 1.15 மணிக்கு புறப்பட்டது. உள்ளூர் நேரப்படி காலை 11.08 மணிக்கு (சிங்கப்பூர் நேரப்படி காலை 8.08) அந்த விமானம் மெல்போர்ன் விமான நிலையத்தில் தரையிறங்கியது.

Related posts