கடந்த ஞாயிற்றுக்கிழமை லிபியாவை டேனியல் புயல் தாக்கியதன் காரணமாக பெருத்த மழை வெள்ளம் ஏற்பட்டுள்ளது. அன்று ஒரே நாளில் மட்டும் நாட்டின் பல பகுதிகளிலும் 400 மில்லி மீட்டருக்கும் அதிகமாக பெய்த கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இதனால் நாடுகளில் உள்ள பல முக்கிய அணைகள் வெள்ளப்பெருக்கின் காரணமாக உடைந்தன. அந்த நாட்டில் உள்ள அணைகளில் குறிப்பிட கன அளவு நீரை மட்டுமே தேட முடியும் என்பதால் எதிர்பாராத பெய்த கனமழை காரணமாக, வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு நாடு நீரில் மூழ்கியுள்ளது.
நம் தமிழ்நாட்டில் ஏற்பட்ட சுனாமியை போன்று ஆயிரக்கணக்கான மக்களை வெள்ள நீர் அடித்து சென்றுள்ளது. எனவே 20 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் வெள்ளத்தில் மூழ்கி பலியாகி இருக்கலாம் என்று எண்ணப்படுகின்றது. வெள்ளத்தில் மூழ்கியவர்களை மீட்கும் பணியானது தொடர்ந்து நடந்த வண்ணம் உள்ளது. இந்தியாவின் வரலாற்றில் இம்மாதிரியான சம்பவம் பதிவாகவே இல்லை என்னும் பொழுது, மக்கள் இந்த பாதிப்பில் இருந்து மீள முடியாமல் தவித்து விடுகின்றனர்.
உண்பதற்கு உணவில்லாமல், இருப்பதற்கு இடமில்லாமல் தவித்து வரும் நிலையில் உலக நாடுகள் அனைத்தும் லிபியாவிற்கு ஆதரவு கரங்கள் நீட்டி வருகின்றனர். மேலும் பல நாட்டின் படைகள் லிபியா நாட்டின் செஞ்சிலுவை சங்கத்துடன் இணைந்து வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்ட உடல்களை மிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர்.