TamilSaaga

“சிங்கப்பூர் VTL சேவை” : பெருந்தொற்றுக்கு பிறகு 34 சதவிகிதம் உயர்ந்த பயணிகளின் அளவு – SIA அறிவிப்பு

சிங்கப்பூர் அதன் தனிமைப்படுத்துதல் இல்லாத பயணத் திட்டத்தை விரிவுபடுத்தியதால், “பாதுகாப்பான பயணத்தை மீண்டும் தொடங்குவதற்கு” மத்தியில், கடந்த அக்டோபர் மாதத்தில் பயணிகள் விமான சேவைகளை பயன்படுத்துவது அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. தொற்றுநோய்க்கு முந்தைய நிலைகளில் இருந்து சுமார் 34 சதவீதம் மீண்டுள்ளதாக சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (SIA) குழு நேற்று திங்களன்று (நவம்பர் 15) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.

சிங்கப்பூர், கடந்த செப்டம்பர் மாதத்தில் ஜெர்மனி மற்றும் புருனேயுடன் தனது முதல் தடுப்பூசி பயண பாதைகளை (VTL) அறிமுகப்படுத்தியது என்பது குறிப்பிடத்தக்கது. இன்றுவரை, சிங்கப்பூர் ஆஸ்திரேலியா, கனடா மற்றும் அமெரிக்கா உட்பட 13 VTLகளுக்கு அது VTL சேவைகளை வழங்கி வருகின்றது. நவம்பர் 29ம் தேதி மலேசியா, பின்லாந்து மற்றும் ஸ்வீடனுடன் VTLகளை அறிமுகப்படுத்துகிறது. மேலும் இந்தியா, இந்தோனேஷியா மற்றும் சவுதி அரேபியா உட்பட பல இடங்களுக்கு இது விரிவுபடுத்தப்படும் என்று நேற்று திங்களன்று அறிவிக்கப்பட்டன.

ஆகவே இந்த திட்டத்தின் கீழ் உள்ள மொத்த நாடுகளின் எண்ணிக்கை தற்போது 21 நாடுகளாக உள்ளது. “அக்டோபர் 2021ல், புருனே மற்றும் ஜெர்மனியைத் தவிர டென்மார்க், பிரான்ஸ், இத்தாலி, நெதர்லாந்து, ஸ்பெயின், UK மற்றும் USAவை உள்ளடக்கியதாக SIA குழுமம் அதன் தடுப்பூசி பயண பாதை வலையமைப்பை விரிவுபடுத்தியது” என்று SIA குழு தெரிவித்துள்ளது.

SIA குழுமத்தில் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் மற்றும் குறைந்த கட்டண விமான சேவை நிறுவனமான Scootம் அடங்கும். அக்டோபரில், குழுவின் பயணிகள் திறன், இருக்கை மற்றும் கிலோமீட்டரில் அளவிடப்படுகிறது, இதில் மாதந்தோறும் 6 சதவீதம் வளர்ச்சியை காணமுடிகிறது என்று SIA தெரிவித்துள்ளது.

Related posts