TamilSaaga

‘சுண்டு விரலைத் தவிர எல்லாம் போச்சு’… ஊருக்கு செல்ல முடியாமல்.. வெளிநாட்டில் சிக்கித் தவிக்கும் தமிழக ஊழியர் – கையெடுத்து கும்பிட்டு கதறும் சோகம்!

வெளிநாட்டில் வேலைக்குச் சென்று சிக்கி, உடல்நலம் பாதிக்கப்பட்டு, இப்போது ஊர் திரும்ப போராடிக் கொண்டிருக்கிறார் அரியலூர் மாவட்டத்தைச் சேர்ந்த ஊழியர் ஒருவர்.

இதுகுறித்து முகநூலில், சுந்தர் காசிமுத்து என்பவர் தனது ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் அந்த ஊழியர் பேசியதாவது, “வணக்கம். நான் அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் மீன்சுருட்டி என்ற ஊரைச் சேர்ந்தவன். என் பெயர் வடிவேலு. நான் மஸ்கட்டுக்கு வந்து நான்கு மாதம் தான் ஆகுது. Labour வேலைக்கு தான் வந்தேன்.

இங்க வேலை பார்த்துகிட்டு இருந்த போது, காலில் டைல்ஸ் விழுந்துடுச்சு. காலில் சுண்டு விரலைத் தவிர நாலு விரலும் போய்டுச்சு. ஆனா, கம்பெனியில என்னை விட மாட்டேங்குறாங்க. பணம் கட்டினால் தான் நான் ஊருக்கு போகமுடியும்-னு சொல்றாங்க. இல்லைனா நீ போக முடியாது. உங்க வீட்ல சொல்லி, பணத்துக்கு ஏற்பாடு பண்ணு-னு சொல்றாங்க. பணத்தை ஏற்பாடு பண்ண எனக்கு எந்த வழியும் இல்ல.

குவைத்தில் உள்ள சிம்பு ரசிகர் மன்றம் தான் எனக்கு உதவி பண்ணிக்கிட்டு இருக்காங்க. என்னோட பேசிக்கிட்டு இருக்காங்க. எனக்கு இந்த பணத்தை கட்டா வழியில்ல. டிக்கெட் போடுறதுக்கே என்கிட்ட பணமில்லை. 75,000 பணம் கேட்குறாங்க. நாங்கலாம் அன்றாடக்காட்சிங்க. வேலைக்கு வரும் போது ஒரு லட்சத்து 10 ஆயிரம் கட்டி வந்தேன். இப்போ திருப்பி ஊருக்கு போக டிக்கெட் போடா கூட பணமில்லை. எனக்கு முடிஞ்சா உதவி பண்ணுங்க. நல்லாயிருப்பீங்க.. சிம்பு ரசிகர் மன்றம் தான் இப்போ எனக்கு உதவிட்டு இருக்காங்க.

மேலும் படிக்க – சிங்கப்பூரில் இருந்து.. விடுமுறைக்கு சென்ற வெளிநாட்டு ஊழியர்களுக்கு அழைப்பு.. தினசரி சம்பளத்தை அதிகரித்த நிறுவனங்கள் – “Game Changer” அறிவிப்பு

மூணு பிள்ளை இருக்கு. அப்பா, அம்மா இருக்காங்க. ஒரு தங்கச்சி இருக்கு. அதை கட்டிக்கொடுத்துட்டோம். 6 லட்சம் கடன் இருக்குன்னு தான் இங்க வேலைக்கு வந்தேன். வந்த இடத்துல இப்படி ஆயிடுச்சு. நான் மட்டும் தான் என் மூணு பிள்ளைகளையும், அப்பா, அம்மாவையும் பார்க்கணும். எனக்கு ஊருக்கு போக எப்படியாவது உதவி பண்ணுங்க” என்று அவர் அழுதுகொண்டு பேசுவதோடு வீடியோ முடிகிறது.

அந்த வீடியோவில் அவர், ‘டைல்ஸ் காலில் விழுந்ததில், சுண்டு விரலைத் தவிர எல்லா விரலும் போச்சு’ என்று சொல்லி, தன் காலை கேமரா முன்பு காட்டுகிறார். அதில், காலில், விரல்களின் மேல் கட்டுப் போடப்பட்டுள்ளது. ஆனால், விரல்கள் அனைத்தும் இருப்பதை காண முடிகிறது. ஒருவேளை, டைல்ஸ் விழுந்ததில் சுண்டு விரலைத் தவிர மற்ற அனைத்து விரல்களின் எலும்புகளும் சேதமடைந்து இருப்பதைத் தான் ‘விரல்களை போச்சு’ என்று அவர் சொல்கிறாரா என்பது தெரியவில்லை.

எது எப்படியோ… அவர் சொல்வது உண்மையாக இருக்கும் பட்சத்தில், நிச்சயம் இது கொடுமை தான்.

Related posts