TamilSaaga

சிங்கப்பூரில் போகிற இடமெல்லாம் சண்டை.. தரம்கெட்ட வகையில் இனவெறி கருத்துக்கள்.. “சிங்கை வாழ் தமிழர்” பீதாம்பரத்திற்கு 6 வார சிறை!

சிங்கப்பூரில் நூலகம் மற்றும் பாலிகிளினிக்கில் பணிபுரியும் பொதுச் சேவைப் பணியாளர்களை நோக்கி இனவெறிக் கருத்துகளை பேசியதற்காக, 69 வயது முதியவருக்கு இன்று புதன்கிழமை (மே 11) ஆறு வார சிறைத் தண்டனை விதிக்கப்பட்டது.

இந்திய வம்சாவளியை சேர்ந்த பீதாம்பரன் திலீப் என்ற சிங்கப்பூரர் இன உணர்வுகளை புண்படுத்தியதாக தன் மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டுகளை ஒப்புக்கொண்டார். இதேபோன்ற மற்ற மூன்று குற்றச்சாட்டுகள் அவரது தண்டனையின்போது பரிசீலிக்கப்பட்டது.

கடந்த ஆண்டு ஜூன் 9ம் தேதி திலீப் கிளமென்டி பொது நூலகத்திற்குச் சென்றதாக நீதிமன்றம் கூறியது. அப்போது அங்கு இருந்த CCTV காட்சிகளில் பதிவான தகவலின்படி பீதாம்பரம் தனது முகமூடியை கீழே இறக்கி அங்கிருந்து குப்பைத்தொட்டியில் எச்சில் துப்புவதை காண முடிந்தது.

இதனை கண்ட அங்கிருந்த துப்புரவு பணியாளர் அதுகுறித்து மேலாளரிடம் புகார் அளித்தார், இந்நிலையில் பீதாம்பரம் திலீப் அங்கிருந்து புறப்படுவதற்கு முன், ஒரு நூலக அதிகாரி அவரை அணுகி, கோவிட் -19 தொற்றுநோய் உள்ள காலத்தில், தொட்டியில் எச்சில் துப்ப வேண்டாம் என்று அறிவுறுத்தினார்.

இதனால் கோபம்கொண்ட திலீப், “Bloody Chinese”, நீ என்ன அவ்வளவு பெரிய ஆளா? “ஜப்பானியர்கள் உங்கள் இனத்தை ஒரு காரணத்திற்காகத் தான் கொன்றனர்” “உன்னை கண்டு நான் பயப்படவில்லை” என்று திமிராக இனவெறியோடு பேசியுள்ளார்.

குழந்தை மனசு கொண்ட திருடன் போல.. சிங்கப்பூரில் பொம்மை கடையில் திருடிய “வினோத திருடன்” – CCTV காட்சிகளை வெளியிட்டு ஆளை தேடும் நிறுவனம்

மேலும் ஒரு மாதம் கழித்து, குற்றவாளி திலீப் மரைன் பரேட் பாலிகிளினிக்கிற்கு சென்றுள்ளார், அவர் என்ன நோயால் பாதிக்கப்பட்டார் என்பதை நீதிமன்ற ஆவணங்களில் குறிப்பிடவில்லை. அங்கு சென்ற அவர் சுகாதார கண்காணிப்பு நிலையத்திற்குள் நுழைந்து, தனது வரிசை டிக்கெட்டை கவுண்டரின் மீது எறிந்துவிட்டு, “நீங்கள் ஏன் இன்னும் இறக்கவில்லை? சீனர்கள் அனைவரும் இறக்க வேண்டும் என்று அங்கிருந்த ஒரு சேவை அதிகாரியை பார்த்து கூறியுள்ளார்.

சிங்கப்பூர் குடும்பங்களுக்கு 100 வெள்ளி மதிப்பிலான CDC வவுச்சர்கள்.. நிதியமைச்சர் லாரன்ஸ் வோங் அறிவிப்பு.. எப்படி பெறுவது? – லிங்க் உள்ளே

அதுமட்டுமல்லாமல் அவர்களை பன்றி என்று கூறி திட்டுயுள்ளார், உடனே அவர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டது. ஆனால் பீதாம்பரம் இவ்வாறு நடந்துகொள்வது இது முதல்முறையல்ல. 2017ம் ஆண்டு பேருந்து ஓட்டுநர் ஒருவரை தாக்கி சிறை சென்றுள்ளார் அவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் ஒரு மிரட்டல் வழக்கில் கடந்த 2005ம் ஆண்டு அவருக்கு 2000 வெள்ளி அபராதம் விதிக்கப்பட்டதும் நினைவுகூரத்தக்கது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts