TamilSaaga

வாந்தி, வயிற்று வலியால் அவதிப்பட்ட 284 பேர்… உணவில் குளறுபடி…சிங்கப்பூரின் பிரபல ரேசல் கேட்டரிங்கிற்கு மூடுவிழா செய்த SFA…

சிங்கப்பூரின் பிரபல ரேசல் கேட்டரிங் நிறுவனத்தின் உணவினை சாப்பிட்டதால் 284 பேர் வாந்தி, மயக்கம், வயிற்று வலி என வழக்குகள் தொடர்ச்சியாக பதிவாகியது. இதனால் அந்த நிறுவனத்தினை அதிகாரிகள் தற்காலிகமாக மூடி இருக்கிறார்கள்.

சிங்கப்பூரில் திடீரென வாந்தி, மயக்கம், வயிற்று வலி என பல கேஸ்கள் அதிகரித்தன. அதிலும், நவம்பர் 8 மற்றும் நவம்பர் 16க்கு இடையில் ஏகப்பட்ட வழக்குகள் ஒரே கேட்டரிங் நிறுவனத்தின் மேல் போடப்பட்டது. இதை விசாரித்து வருவதாக சுகாதார அமைச்சகம் (MOH) மற்றும் சிங்கப்பூர் உணவு நிறுவனம் (SFA) சனிக்கிழமை (நவம்பர் 19) கூட்டறிக்கையில் தெரிவித்தனர்.

மேலும் படிக்க: இனி சிங்கப்பூரர்களுக்கு தடையின்றி சிக்கன் கிடைக்கும்.. அந்த நாட்டில் இருந்து இறக்குமதி – SFA அறிவிப்பு

அந்த அறிக்கையில், 253, பாண்டன் லூப் சிங்கப்பூர் 128432இல் அமைந்துள்ள ரசல் கேட்டரிங் சிங்கப்பூர் பிரைவேட் லிமிடெட்டின் இயங்க 2022 நவம்பர் 18 முதல் அடுத்த அறிவிப்பு வரும் வரை SFA நிறுத்தி வைத்துள்ளது” என்று MOH மற்றும் SFA தெரிவித்துள்ளது.

இந்த பிரச்னையால் பாதிக்கப்பட்ட மக்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்படவில்லை. டாக்டரை கூட பார்க்கவில்லை. வீட்டிலேயே சுயமாக மருந்து எடுத்துக் கொண்டு குணமாகி விட்டனர்.

இருந்தும், இந்த தடையை SFA போட்டுள்ளது. அந்நிறுவனத்தினை உடனடியாக சுத்தம் செய்து கிருமிநாசினி தெளிக்க வேண்டும். உணவு செய்யும் பொருட்களையும் மீண்டும் சுத்தம் செய்ய வேண்டும். பதப்படுத்தப்பட்ட உணவுகளை உடனே வெளியேற்ற வேண்டும்.

கேட்டரிங்கில் வேலை செய்யும் ஊழியர்களும், உணவு சுகாதார அதிகாரிகளும் உடனடியாக உணவு பாதுகாப்பு படிப்புகளில் மீண்டும் சேர்ந்து பாஸ் பண்ண வேண்டும். உணவை கையாளும் பிரிவில் இருக்கும் ஊழியர்கள் food pathogens எனப்படும் உணவு வழி நோய்தொற்று டெஸ்ட்டை எடுத்து நெஜட்டிவ் என வந்த பிறகே பணியில் சேர வேண்டும்.

இதையும் படிங்க: சிங்கப்பூரில் “Kinder Surprise” சாக்லேட்டால் நோய் பரவும் அபாயம்.. பெற்றோர்களுக்கு SFA “அவசர” எச்சரிக்கை

நம் நாட்டின் உணவுப் பாதுகாப்பு என்பது நமது அனைவரின் கடமை என்று என்று MOH மற்றும் SFA தெரிவித்துள்ளது. மேலும், சுற்றுச்சூழல் பொது சுகாதாரச் சட்டத்தை மீறும் எவருக்கும் எதிராக உறுதியான நடவடிக்கை எடுக்கத் தயங்காது.

பொதுமக்கள் இதுபோன்று நிறுவனத்தினை ஆதரிக்க வேண்டாம். மாறாக மோசமாக இருக்கும் உணவகங்கள் குறித்து அதிகாரிகளுக்கு ஆன்லைன் மூலம் தெரியப்படுத்த வேண்டும். அதனால் தான் உணவின் சுகாதாரத்தினை முறையாக பராமரிக்க முடியும் எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சிங்கப்பூரின் அனைத்து முக்கியமான செய்திகளையும் தமிழில் தெரிந்து கொள்ள “Tamil Saaga Singapore” facebook பக்கத்தை follow பண்ணுங்க

Related posts