TamilSaaga

முதல் டோஸ் தடுப்பூசி.. மாரடைப்பால் பாதிக்கப்பட்ட 16 வயது வாலிபர் – நிதி உதவி அளித்த சிங்கப்பூர்

சிங்கப்பூரில் பெருந்தொற்று தடுப்பூசியின் முதல் டோஸுக்குப் பிறகு மாரடைப்பால் பாதிக்கப்பட்ட 16 வயது சிறுவனின் உடல் நிலை தற்போது சீராக மீட்கப்பட்டு வருவதாகவும். தடுப்பூசியால் ஏற்படும் அசௌகரியங்களுக்கு வழங்கும் நிதி உதவித் திட்டத்தின் (VIFAP) கீழ் அந்த சிறுவனுக்கு 2,25,000 வெள்ளி அளிக்கப்பட்டுள்ளது என்றும் தகவல் வெளியாகி உள்ளது.

தற்போது அவருக்கு உள்நோயாளிகளுக்கு வழங்கப்படும் சிகிச்சைகள் அளிக்கப்பட்டு வருகின்றது. மற்றும் அவரது அன்றாட வாழ்வில் பிறருடைய உதவியின்றி செயல்பட முடியும் என்று சுகாதார அமைச்சகம் (MOH) இன்று திங்களன்று (ஆகஸ்ட் 16) வெளியிட்ட ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

வரவிருக்கும் வாரங்களில் அவர் டிஸ்சார்ஜ் செய்யப்படுவார் என்றும், ஆனால் அவர் பள்ளிக்குத் திரும்பி மற்ற நடவடிக்கைகளைத் தொடங்குவதற்கு முன்பு மேலும் சில காலம் ஓய்வு தேவைப்படும் என்றும் சிங்கப்பூர் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

ஃபைசர்-பயோஎன்டெக்/கொமர்னாட்டி தடுப்பூசியின் முதல் டோஸைப் பெற்ற ஆறு நாட்களுக்குப் பிறகு, ஜூலை 3 ஆம் தேதி ஜிம்மில் பளுதூக்குதலில் ஈடுபட்டதை அடுத்து 16 வயதான அந்த இளைஞர் வீட்டில் இருந்த நிலையில் நிலைகுலைந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts