TamilSaaga

சிங்கப்பூரில் இருந்து.. விடுமுறைக்கு சென்ற வெளிநாட்டு ஊழியர்களுக்கு அழைப்பு.. தினசரி சம்பளத்தை அதிகரித்த நிறுவனங்கள் – “Game Changer” அறிவிப்பு

SINGAPORE: சிங்கப்பூரில் Construction துறையில் பணியாற்றும் ஊழியர்களின் தினசரி சம்பளம் அதிகரிக்கப்பட்டுள்ளதாக சிங்கையின் “THE STRAITS TIMES” ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

சிங்கப்பூரில் பெருந்தொற்று காரணமாக, கடந்த 2 வருடங்களாக பல வெளிநாட்டு ஊழியர்களுக்கே விடுமுறை கிடைக்கவில்லை. இன்னும் சொல்லப்போனால், ஊழியர்கள் யாருமே சிங்கையை விட்டு வெளியேற முடியாத நிலை இருந்தது. ஏனெனில், தொற்று பரவல் காரணமாக, விமான சேவைகள் முற்றிலும் குறைக்கப்பட்டிருந்தன.

கடந்த ஜனவரி மாதத்துக்கு பிறகு தான், நிலைமை மெல்ல மெல்ல சகஜ நிலைமைக்கு திரும்பியது. குறிப்பாக, சிங்கை தனது அனைத்து எல்லைகளையும் முழுவதும் திறந்த பிறகே, விமான போக்குவரத்து என்பது சீரானது.

இதையடுத்து, பல மாதங்களாக சிங்கப்பூரை விட்டு வெளியே முடியாமல் தவித்து வந்த ஊழியர்கள், அடுத்தடுத்து விடுமுறை எடுத்துக் கொண்டு சொந்த ஊர்களுக்கு கிளம்பினர். மே மாதத்துக்கு பிறகு, சாங்கி விமான நிலையம் முழுவதும் ஆக்கிரமித்திருந்தது வெளிநாட்டு ஊழியர்களே.. அந்த அளவுக்கு அவர்களின் போக்குவரத்து அதிகமானது.

| இன்னும் சொல்லப்போனால், கல்யாணம் நிச்சயிக்கப்பட்டு, தொற்று காரணமாக சிங்கையில் முடங்கி, திருமணத்தையே காலவரையின்றி ஒத்திவைத்தவர்கள் ஏராளம். அவர்கள் எல்லாம் விட்டால் போதும் என்று மனநிலையில் தான் இருந்தார்கள். சில ஊழியர்கள், தங்களுக்கு பிறந்த குழந்தையை கூட பார்க்க முடியாத நிலையில் தத்தளித்தனர். எனினும், மே மாதத்துக்கு பிறகு, பலரும் சொந்த ஊர்களுக்கு கிளம்பினார்கள். |

சீனியர் ஊழியர்கள்

இதில், கவனிக்க வேண்டிய விஷயம் என்னவெனில், இதில் பெரும்பாலான ஊழியர்கள் சீனியர்கள். அதாவது, அந்தந்த நிறுவனத்தின் சீனியர் ஊழியர்கள் தான் உடனடியாக டிக்கெட் போட்டு ஊருக்கு கிளம்பிச் சென்றனர். இதனால், சிங்கையில் பல்வேறு நிறுவனங்களில் வேலை திறன் கடுமையாக பாதிக்கப்பட்டது. வேலை நடந்தது.. ஆனால், அது திறம்பட நடந்ததா? அல்லது அல்லது வழிநடத்தப்பட்டதா? என்று கேட்டால் இல்லை என்று தான் சொல்ல முடியும்.

பணியிடத்தில் வெளிநாட்டு ஊழியர்கள் விபத்தில் சிக்கி உயிரிழப்பதும், பணியிடத்தில் ஏற்படும் வெவ்வேறு விபத்துகளுக்கு கூறப்படும் பல காரணங்களில் ஒன்று, அனுபவமில்லாத ஊழியர்களின் தலைமையில் வேலைகள் நடப்பதால், அவர்களால் திறமையாக அதனை கையாள முடியாமல் போகும் போது, பணியிட விபத்துகள் ஏற்படுவதாக நிறுவனங்கள் குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றன.

மேலும் படிக்க – கபடி.. கபடி… சிங்கப்பூரில் தொடையைத் தட்டி… கெத்து காட்டிய வெளிநாட்டு ஊழியர்கள் – Final-ல் தோற்றாலும் “மீசையை முறுக்கிய” ஆட்டம்!

சமீபத்தில், சிங்கப்பூர் மனித வளத்துறை அமைச்சகம், ‘பணியிட விபத்துகள் ஏற்படுவதன் காரணம் குறித்து பல்வேறு நிறுவனங்களில் விளக்கம் கேட்டிருந்தது. இதற்கு பெரும்பாலான நிறுவனங்கள் அளித்த பதில் இதுதான்,

தடுமாறும் புதியவர்கள்

“தொற்று காரணமாக, பல மாதங்களாக முடங்கியிருந்த பணிகள் இப்போது மிக வேகமாக நடைபெற்று வருகிறது. நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்குள் அதை முடித்து கொடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. இந்த சூழலில், நல்ல திறமையான மூத்த ஊழியர்கள் பலர் விடுமுறையில் அவர்கள் நாட்டுக்கு சென்றிருப்பதால், புதியவர்களை வைத்தே வேலை வாங்க வேண்டியுள்ளது. அவர்களால் நிறுவனத்தின் வேகத்துக்கு ஈடு கொடுக்க முடியவில்லை. அவர்களால் சரியாக மேற்பார்வை செய்ய முடியவில்லை. பணியிட விபத்துகள் ஏற்படுவதற்கு இதுவும் காரணமே” என்று நிறுவனங்கள் சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

இது ஒருபுறம் இருக்க, தற்போது சிங்கப்பூரில் கட்டுமானத் துறையின் வளர்ச்சி, பெருந்தொற்று காலத்துக்கு முன்பிருந்த நிலையை விட, இப்போது அதிகரித்திருப்பதாக சிங்கையின் ‘THE STRAITS TIMES’ செய்தி நிறுவனம் குறிப்பிட்டுள்ளது.

மீண்டெழும் கட்டுமானத்துறை

மேலும், கோவிட்-19 பெருந்தொற்றின் உச்சக்கட்டத்தில் மிக மோசமாகப் பாதிக்கப்பட்ட நாட்களில் இருந்து இந்தத் துறை மீண்டு வருவதால், சிங்கப்பூரில் உள்ள கட்டுமான நிறுவனங்கள் ஊழியர்களை பணியமர்த்தலையும், அவர்களுக்கான ஊதியத்தையும் அதிகப்படுத்தி வருவதாக தெரிவித்துள்ளது.

பெருந்தொற்றுக்கு முன்பு இருந்த தினமும் சராசரியாக 18 டாலர் என்ற அளவிலிருந்த ஊதியம், இப்போது 23 டாலர் என்று உயர்ந்துள்ளதாகவும் STRAITS TIMES பத்திரிக்கை செய்தி வெளியிட்டுள்ளது. இந்நிலையில், கட்டுமான துறையில் ஏற்கனவே பணியாற்றி ஊருக்கு சென்றிருந்த ஊழியர்களில்.. திறமையான ஊழியர்களை மீண்டும் சிங்கை நிறுவனங்கள் பணிக்கு திரும்பும்படி அழைத்து வருகின்றன. அதுமட்டுமின்றி, ஊதிய உயர்வு குறித்தம் நிறுவனங்கள் பேசி வருகின்றன. அடுத்தடுத்த நாட்களில், சிங்கப்பூருக்கு கட்டுமானத்துறையில் வேலைக்கு வருபவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பழைய ஊழியர்களுடன், பல புதியவர்களுக்கு இத்துறையில் என்ட்ரி கொடுப்பார்கள் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

இதுபோன்ற சிங்கப்பூரின் அனைத்து முக்கிய செய்திகளையும் தமிழில் படிக்க, “தமிழ் சாகா சிங்கப்பூர்” முகநூல் பக்கத்தை Follow பண்ணுங்க

Related posts