சிங்கப்பூர் வாழ் வெளிநாட்டு ஊழியர்களுக்கு மட்டுமின்றி உலக அளவில் சொந்த நாடுகளை விட்டு வெளியே சென்று பிற தேசங்களில் வேலை செய்துவரும் தொழிலாளர்களுக்கு NRI வங்கி கணக்கு எந்த அளவுக்கு அவசியம் என்பதை சில தினங்களுக்கு முன்பு நமது பதிவில் பார்த்தோம். அதே போல இந்த NRI வங்கிக்கணக்கை ஒரே கணக்காக இறுதிவரை பயன்படுத்துவதால் ஏற்படும் பல நன்மைகளை குறித்து இந்த பதிவில் நாம் காண்போம்.
வருமானவரி பிரச்சனை
இந்த NRI வங்கி கணக்குகளை ஒரே கணக்காக பயன்படுத்தி வரும் நிலையில் அவர்களுக்கு வருமான வரி குறித்த பிரச்சனைகள் எதும் இருக்காது.
ஒரே கணக்காக நீங்கள் பயன்டுத்தும்பட்சத்தில் உங்கள் சம்பளத்தின் முழு கணக்கையும் நீங்கள் முறையாக கணக்கிட முடியும். மேலும் வங்கி மேலாளர்களோடு ஒரு சிறந்த உறவு அமையும், இது பல நன்மைகளுக்கு வழிவகுக்கும்.
வங்கியுடன் ஏற்படும் நல்லுறவு
மேலும் இதுபோன்ற NRI வங்கி கணக்குகளை வங்கி நிர்வாகம் கூர்ந்து கவனிப்பது உண்டு. எத்தனை ஆண்டுகளாக கணக்கு வைத்திருக்கிறார்கள், எப்படி அந்த கணக்கை நிர்வகித்து வருகின்றனர் என்பதை கண்காணிக்கின்றனர். இது NRI கணக்கு வைத்திருக்கும் ஊழியர்களுக்கு கூடுதல் சிறப்புகளை வழங்குகிறது.
தனிநபர் மற்றும் வீட்டுக் கடன்
ஒரு சில சமயங்களில் நாம் கணக்கு வைத்திருக்கும் வங்கியின் மேலாளர் மாற்றமடைந்தாலும் நமது நீண்டநாள் கணக்கு வருகின்ற புது மேலாளருக்கு நம்மை பற்றிய தகவல்களை தெளிவாக எடுத்துரைக்கும். இதனால் தனிநபர் கடன், வியாபாரக் கடன், வீடு கட்ட கடன் உள்ளிட்ட பல லோன்களை செயல்படுத்தவும் மிகவும் உறுதுணையாக இருக்கும்.
இதனால் வெளிநாட்டில் கஷ்டப்பட்டு உழைக்கும் பணத்தை உங்களால் மிகச்சிறந்த முறையில் சேமிக்கவும் முடியும், அதே சமயம் ஒரே வங்கியில் கணக்கு வைத்திருப்பதால் பல நன்மைகளும் வந்தடையும்.