ஒரு மனிதனுக்கு அதிர்ஷ்டம் எப்போது வேண்டுமானாலும் அடிக்கலாம். ஆனால், அதை எதிர்பார்த்து இருக்க முடியாது. எனினும், நல்ல நேரம் என்று இருந்தால், அதிர்ஷ்டம் கூரையை பெயர்த்துக் கொண்டு அடிக்கும். அப்படி ஒருவருக்கு இங்கு அதிர்ஷ்டம் அடித்திருக்கிறது. ஏனோதானோ அதிர்ஷ்டம் அல்ல.. நெத்தியடி அதிர்ஷ்டம்.
Mohamad Kitartech என்ற நபர் முகநூல் பக்கத்தில் ஒரு பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், மலேசியாவின் ஜோஹோர் பஹ்ருவில் உள்ள Pasar Karat (Karat Market) எனும் இரவு சந்தைக்கு சென்ற அந்த நபர், அங்கு வாட்ச் strap ஒன்றை வாங்கியிருக்கிறார். இந்த மார்கெட் சிங்கப்பூரர்கள் அதிகம் பயன்படுத்தும் ஒன்றாகும்.
அதை அவர் சிங்கப்பூரில் மதிப்பில் 3 டாலருக்கு வாங்கியிருக்கிறார். அதாவது மலேசியாவின் கரன்சியில் RM10. அதாவது 10 ரிங்கிட். தங்க நிறத்தில் இருந்த Strap-ஐ தான் அவர் வாங்கியிருக்கிறார். பிறகு வீட்டுக்கு வந்ததும் அந்த தங்க நிற watch strap-ஐ எடை போட்டு பார்த்திருக்கிறார்.
மொத்தம் 41.44 கிராம் எடையுள்ள அந்த strap-ல் , சுமார் 28.6 கிராம் தங்கத் துண்டுகள் இருப்பது தெரியவந்தது. அதன்பிறகு, தங்கத் துண்டுகளில் எவ்வளவு உண்மையான தங்கம் உள்ளது என்பதை கண்டறிய எளிய சோதனையை மேற்கொண்டார்.
இதில், 24.91 கிராம் தங்கம் இருப்பதை அவர் செய்தார். அதாவது, இதில் 99.9 வேறு எந்த உலோகத்துடனும் கலக்காத சுத்தமான தங்கமாக இருந்ததை கண்டறிந்தார்.
இறுதியில், அந்த watch strap-ன் மொத்த தங்கத்தின் மதிப்பு 2,275 சிங்கப்பூர் டாலர் இருப்பது கண்டறியப்பட்டது. இதன் மூலம், 3 சிங்கப்பூர் டாலருக்கு வாங்கிய அவருக்கு, 2,272 சிங்கப்பூர் டாலர் லாபமாக கிடைத்துள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.
இதைத்தான் கூரை பிச்சிக்கிட்டு கொடுக்கிறது-னு சொல்றாங்களோ!!