ஜூலை 1 முதல், work permit மற்றும் s pass ஊழியர்களை வேலைக்கு எடுக்கும் நிறுவனங்கள் தங்கள் தொழிலாளர்களுக்கு உயர் மருத்துவ காப்பீட்டுத் தொகையை $15000ல் இருந்து ஆண்டுக்கு $60,000ஆக மாற்றி உத்திரவிடப்பட்டு இருக்கிறது.
வீட்டு வேலை செய்பவர்களுக்கும் பொருந்தும் இந்தப் புதிய தேவை, மருத்துவச் செலவுகள் அதிகரிக்கும்போது, முதலாளிகள் பெரிய பில்களை ஈடுகட்டவும், அவர்களின் செலவுகளைக் குறைக்கவும் உதவுவதாக, மனிதவள அமைச்சகம் (MOM) சமீபத்தில் தெரிவித்துள்ளது. 5 சதவீதத்திற்கும் அதிகமான வெளிநாட்டுத் தொழிலாளர்களின் மருத்துவக் கட்டணம் தற்போதைய $15,000 கவரேஜ் வரம்பை மீறுவதை சுட்டிக்காட்டி இந்த புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சிங்கை வரும் ஊழியர்கள்… கையில் இருக்க வேண்டிய security bond… யார் எடுக்கப்பட வேண்டும்? யாருக்கு இந்த பாண்ட் கிடையாது?
ஆண்டுக்கு சராசரியாக 1,000க்கும் மேற்பட்ட முதலாளிகள் இந்தப் பிரச்சினையை எதிர்கொள்கின்றனர் என்று மனிதவள மூத்த இணை அமைச்சர் கோ போ கூன் மார்ச் 2022ல் நாடாளுமன்றத்தில் கூடுதல் காப்பீட்டுத் தொகைக்கான நடவடிக்கையை அறிவித்தபோது கூறினார்.
மருத்துவமனை மற்றும் அறுவை சிகிச்சை முறைகளுக்கான 99 சதவீதத்திற்கும் அதிகமான பில்கள் புதிய கவரேஜ் வரம்பிற்குள் வரும் என்று MOM மதிப்பிட்டுள்ளது. புதிய விதிகளின்படி, முதலாளிகள் $15,000க்கு மேல் செல்லும் முதல் க்ளைம் தொகையில் 25 சதவீதத்தை இணைந்து செலுத்த வேண்டும்.
அதாவது, ஒரு தொழிலாளி இதய அறுவை சிகிச்சைக்காக $60,000 பில் செலுத்தினால், முதலாளி $11,250 செலுத்த வேண்டும், அதாவது $45,000ல் 25 சதவீதம். மற்ற $48,750ஐ காப்பீட்டு நிறுவனம் செலுத்தி விடும். ஜூலை 2025 முதல், வேறு பல மாற்றங்களும் செயல்படுத்தப்படும்.
இதையும் படிங்க: சிங்கப்பூரில் வேலைக்கு செல்ல இருக்கீங்களா… Verification Proof கேட்டால் என்ன செய்யவேண்டும்… இந்த கம்பெனிகளில் மட்டும் தான் கிடைக்கும்
முதலாளிகள் இனி தங்கள் தொழிலாளர்களின் மருத்துவ சிகிச்சைக்கு பணம் செலுத்தி விட்டு இன்சூரன்ஸ் நிறுவனத்திடம் வாங்கி கொள்ள தேவை இருக்காது. அதற்கு பதிலாக காப்பீட்டாளர்களே மருத்துவமனைகளுக்கு நேரடியாகத் திருப்பிச் செலுத்த வேண்டும். ப்பீட்டாளர்களுக்கான அனுமதிக்கக்கூடிய விலக்குகளின் நிலையான பட்டியல் இருக்கும்.
அதே முதலாளியின் கீழ் பணிபுரியும் முதல் 12 மாதங்களுக்குள் ஏற்கனவே இருக்கும் நோய்களுக்கான சிகிச்சைகளை காப்பீட்டாளர்கள் செலுத்த வேண்டியதில்லை. ஜூலை 2025 முதல் 50 வயது மற்றும் அதற்குக் குறைவான தொழிலாளர்களுக்கும் 50 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் வெவ்வேறு பிரீமியங்களை காப்பீட்டாளர்கள் வழங்க வேண்டும்.
கடந்த ஆண்டு இறுதி வரை வொர்க் பெர்மிட்டில் 1,033,500 வேலை செய்து வருகின்றனர். 177,900 SPass வைத்திருப்பவர்கள் சிங்கப்பூரில் பணிபுரிந்துள்ளனர். வெளிநாட்டு தொழிலாளர்களின் மருத்துவக் கட்டணங்கள் மானியம் அல்லது மெடிஷீல்ட் லைஃப் மற்றும் மெடிஃபண்ட் போன்ற தேசிய திட்டங்களின் கீழ் வழங்கப்படுவதில்லை என்பது குறிப்பிடத்தக்கது.