நியூஸிலாந்தைச் சார்ந்த பெண் ஒருவர் ஆறரை வருடங்களாக ஒருவரை காதலித்து வந்துள்ளார். நன்றாகத் தான் போய்க் கொண்டிருந்தது. ஒரு நாள் இந்தப் பெண்ணும் அவரது நண்பர்களும் சேர்ந்து ஒரு Concert செல்வதாக இருந்துள்ளனர்.
அதற்காக விமானம் ஏற வேண்டும். தன்னை விமான நிலையத்தில் கொண்டு டிராப் செய்ய காதலனிடம் சொல்லி இருக்கிறார். காலை 10 மணி முதல் 10.15-க்குள் தன்னை வீட்டில் வந்து பிக்கப் செய்யுமாறு குறுஞ்செய்தியும் அனுப்பியுள்ளார்.
வழக்கம்போல் அவரும் தலையாட்டிவிட்டு சென்றுள்ளார். அடுத்த சில நாட்களில் இந்தப் பெண் அவரது காதலன் மீது சத்தியத்தை மீறியதற்காக அதாவது வாய்வழியாக கொடுத்த வாக்கை நிறைவேற்றாமல் போனதற்கு வழக்குத் தொடுத்துள்ளார்.
காரணம் காதலன் டிராப் செய்ய வராததால் விமானத்தை தவற விட்டுவிட்டாராம்! வராமல் இருந்ததுடன் நாளை செல்லலாம் எனவும் கூறி மிகப்பெரிய குற்றத்தை இழைத்து விட்டாராம்! இதனால் தனக்கு பொருட்சேதமும் மனக்கஷ்டமும் ஏற்பட்டு விட்டதாக புகார் அளித்துள்ளார்.
ஆம் மிகவும் வித்தியாசமாக உள்ளதல்லவா?
இப்படியொரு நிகழ்வு தான் நியூஸிலாந்தில் நிகழ்ந்துள்ளது. அந்தப் பெண்மணி தனது காதலன் மீது Verbal Contract-ஐ உடைத்ததற்காக வழக்கு தொடுத்துள்ளார். இப்படியெல்லாம் கேஸ் போட முடியுமா என்று தானே கேட்கிறீர்கள்? ஆம், முடியும்.
இந்த உலகத்தில் நமக்கு நெருக்கமான நண்பர்கள், குடும்பத்தினர் என பல பேர் உள்ளனர். இதில் நாம் ஒருவரின் பேரில் கொண்ட நம்பிக்கையால் தான் வாக்குகள் கொடுக்கிறோம். ஒரு காரியத்தை செய்வதாகவும் சத்தியம் செய்கிறோம். யாரும் பேசும் அனைத்தையும் பத்திரம் போட்டு கொடுப்பதில்லை. ஆனால் கொடுத்த வாக்கை மீறுவதும் ஒப்பந்தத்தை உடைத்ததாகத் தான் கருதப்படுமாம். அதனால் தான் இந்தப் பெண் தனது காதலர் மீது வழக்கு தொடுத்துள்ளார்.
இந்த வித்தியாசமான வழக்கை விசாரித்த நீதிமன்றம் அந்தப் பெண் கூறியதை ஒப்புக்கொண்டுள்ளது. மேலும் இதுபோல் கொடுத்த வாக்கை மீறுவது எதிர்தரப்பினருக்கு வருத்தத்தை வரவழைக்கும் சில சமயம் பொருளாதார இழப்புகளும் ஏற்படும் எனவே அதை தவிர்க்க நீதிமன்றம் அறிவுரை வழங்கியுள்ளது.
செய்த தவறை தனது காதலனுக்கு புரிய வைக்க இந்தப் பெண் எடுத்த இந்த முயற்சி குறித்து பல கலவையான விமர்சனங்கள் எழுந்து வருகின்றன.