TamilSaaga

“நீ தவறு செய்தால், அதற்கான விலையை கொடுத்தே ஆகவேண்டும்” : சிங்கப்பூரில் கைதான நபர் – CNB அதிரடி

சிங்கப்பூரில் CNB என்று அழைக்கப்படும் மத்திய போதைப்பொருள் தடுப்புப் பிரிவின் (CNB) அதிகாரிகள் இரண்டு வார காலம் நாடளாவிய ரீதியில் மேற்கொண்ட நடவடிக்கையில் 49 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குறிப்பாக கடந்த நவம்பர் 16 அன்று அதிகாலை ஒரு வீட்டில் அதிரடி சோதனை செய்வதற்காக அவர்கள் நுழைந்தனர். சந்தேகிக்கப்பட்ட அந்த நபரின் அறையில், பிளாஸ்டிக் பைகளில் போதைப் பொருட்கள் மற்றும் படிகம் போன்ற பொருட்கள் இருப்பதை அதிகாரிகள் கண்டுபிடித்தனர். பொருட்களை புகைப்படம் எடுத்து, பதிவு செய்து பறிமுதல் செய்தனர்.

இதையும் படியுங்கள் : ஏன் இந்த அவல நிலை? – வல்லுநர்கள் சொல்வதென்ன?

சந்தேகத்திற்கு இடமான அந்த 30 வயதுடைய நபரிடம் விசாரணை நடத்தப்பட்ட நிலையில், அவரது பெற்றோர் தனி அறையில் அமைதியாக அமர்ந்திருந்தனர், அவர்களுக்கு தங்கள் மகன் இதுபோன்ற விஷயங்களில் ஈடுபட்டது பெரும் அதிர்ச்சியாக இருந்தது. அவரை கைது செய்து அழைத்துச் செல்லும்போது அந்த தந்தை தனது மகனிடம் “பரவாயில்லை விடு, நீ தவறு செய்திருந்தால், அதற்கான விலையை கொடுத்தே ஆகவேண்டும்” என்று கனத்த குரலில் கூறியுள்ளார்.

CNB-யானது, தி ஸ்ட்ரெய்ட்ஸ் டைம்ஸ் உள்ளிட்ட பத்திரிகையாளர்களை, WeChat உள்ளிட்ட செய்தியிடல் செயலிகளில் போதைப்பொருள் வாங்கிய சந்தேக நபர்களை குறிவைத்து சோதனையில் அதிகாரிகளுடன் செல்ல அனுமதித்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. குறித்து பேசிய, இந்த பணியகத்தின் புலனாய்வுப் பிரிவின் இயக்குநரான கண்காணிப்பாளர் ஆரோன் டாங் : “இந்தக் குற்றவாளிகள் தங்கள் சட்டவிரோதச் செயல்களைச் செய்ய சில செயலிகள் அனுமதிப்பதால் தாங்கள் யாரிடமும் சிக்கிக்கொள்ள மாட்டோம் என்று நினைக்கின்றனர்”. என்று கூறினார்.

ஆனால் அவர்கள் நினைப்பது தவறு ஜனவரி 2019 மற்றும் இவ்வாண்டு செப்டம்பர் 17-க்கு இடையில் டெலிகிராம் பரிவர்த்தனைகளுடன் தொடர்புடைய 77 கடத்தல்காரர்களை போதைப்பொருள் தடுப்பு படை கைது செய்துள்ளனர் என்றும் அவர் கூறினார்.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts