காதலை பரிமாறிக் கொள்ள ‘லிப்லாக்’ முத்தம் கொடுக்கும் பழக்கம் வெளிநாடுகளில் சாதாரணமான ஒன்று. ஆனால், அதுவே வினையாக வந்து முடிந்து இருக்கின்றது. சீனாவில் தன் காதலிக்காக ஆசையாக 10 நிமிடம் இடைவிடாமல் லிப் லாக் முத்தம் கொடுத்த இளைஞருக்கு காது கேட்கும் திறன் பாதிக்கப்பட்டுள்ளது. சீனாவை சேர்ந்த இளம் ஜோடி இருவர், தங்கள் காதலை பரிமாறிக் கொள்ளும் விதமாக வெளியில் அவுட்டிங் சென்ற பொழுது ஒருவருக்கொருவர் முத்தம் கொடுத்துள்ளனர்.
ஆனால் காதலி மீது உள்ள அளவில்லா அன்பின் காரணமாக 10 நிமிடம் இடைவிடாது முத்தம் கொடுத்த காதலனுக்கு திடீரென்று காது வலித்துள்ளது. முதலில் சாதாரணமாக எடுத்துக் கொண்ட இளைஞர் வலி சற்று அதிகமாகவே உடனடியாக மருத்துவமனைக்குச் சென்றுள்ளார். மருத்துவமனைக்கு சென்ற பொழுது காது முன்பு போல் கேட்கவில்லை என்பதை இளைஞர் உணர்ந்துள்ளார்.
அதன் பிறகு, அவரது காதினை பரிசோதனை செய்த டாக்டர்கள் காதில் உள்ளே உள்ள மெல்லிய ஜவ்வில் இரண்டு துளைகள் ஏற்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளனர். எனவே டாக்டர்கள் அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். சீனாவில் இந்த சம்பவம் நடப்பது புதிதல்ல. இதேபோன்று 2008 ஆம் ஆண்டு இளம் ஜோடி ஒருவர் முத்தத்தினை பரிமாறி கொண்ட பொழுது, காது வலி ஏற்பட்டு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். எனவே, காதலியுடன் அன்பை பரிமாறிக் கொள்ளும் காதலர்களே சற்று ஜாக்கிரதையாக இருங்கள்.