நடிகை யாஷிகா ஆனந்தின் கார் விபத்து வீடியோ சமூகவலைத்தளங்களில் விவாதப் பொருளாக மாறியுள்ளது.. என்ன அது? விரிவாக பார்ப்போம் வாருங்கள்.
இருட்டு அறையில் முரட்டு குத்து , ஜாம்பி போன்ற படங்களில் நடித்தவர் யாஷிகா ஆனந்த். பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பின்னர் மிகவும் பிரபலமான நடிகையாக மாறினார். அடுத்தடுத்த படவாய்ப்புகள் குவிந்தனர்.
இதற்கிடையில் தனது ரசிகர்களுக்காக அவ்வப்போது ஃபோட்டோஷூட் நடத்தியும் கவர்ச்சியான சில புகைப்படங்களை வெளியிட்டும் சோஷியல் மீடியாவில் பீக்கில் இருந்தார். இந்நிலையில் 2 நாட்களுக்கு முன்பு தனது நண்பர்களுடன் கடுமையான கார் விபத்தில் சிக்கி இப்போது தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
எப்படி நடந்தது விபத்து?
கடந்த சனிக்கிழமை (24.7.2021) இரவு புதுச்சேரியில் இருந்து கிழக்கு கடற்கரைச் சாலை வழியாக காரில் சென்னைக்கு வந்த போது மகாபலிபுரம் அருகே விபத்தில் சிக்கினார்.
யாஷிகாவுடன் காரில் வந்த ஹைதராபாத்தைச் சேர்ந்த அவரது பெண் தோழி வள்ளி ஷெட்டி பவானி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்நிலையில் அதிவேகமாக காரை ஓட்டியதால் தான் விபத்து நிகழ்ந்ததாகக் கூறும் போலீசாருக்கு யாஷிகாவின் தோழி பவானி எடுத்த வீடியோ ஒன்றும் கிடைத்துள்ளது. அந்த வீடியோவில் காரை ஓட்டும் யாஷிகா அடிக்கடி கையை விட்டும், கையை தட்டியும் ஸ்டைலாக ஓட்டுகிறார். இந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி உள்ளது.
மேலும், விபத்தின் மூலம் மரணத்தை விளைவித்தல், அதிவேகமாக வாகனத்தை இயக்குதல் என்ற இரண்டு பிரிவுகளின் கீழ் யாஷிகா ஆனந்த் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்லது. யாஷிகா ஆனந்த்தின் ஓட்டுநர் உரிமமும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
ஏற்கெனவே மதுபோதையில் இருந்ததால் தான் இந்த கார் விபத்து ஏற்பட்டதாக ஏராளமான பேச்சுகள் பரவிக்கொண்டிருக்க இப்போது இந்த வீடியோவும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.ஆனால் மது அருந்திவிட்டு யாஷிகா வாகனத்தை ஓட்டவில்லை என்பதும் தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவிக்கின்றனர்.
உண்மை என்ன என்பது யாஷிகா போலீசாரிடம் கொடுக்கும் தகவல்கள் மூலமே அனைவருக்கும் தெரிய வரும்.