TamilSaaga

“ஆள் அடையாளமே தெரியாமல் மாறிப்போன “Captain” விஜயகாந்த் – ரசிகர்கள் மட்டுமல்ல சாமானியர்களும் வேதனை!

நாராயணன் விஜயராஜ் அழகர்சாமி என்ற இயற்பெயரோடு அருப்புக்கோட்டை நகரில் இருந்து நடிப்புலகை நோக்கி வந்த ஒரு சகாப்பதம் தான் விஜயகாந்த். இந்திய சினிமாவில் குறிப்பாக, தமிழ் சினிமாவில் வெகு சில நடிகர்கள் மட்டும் அவர்களுடைய தாய் மொழியில் மட்டுமே நடித்து வருகின்றனர். அந்த வரிசையில் நிச்சயம் விஜயகாந்திற்கு முதலிடம் அளிக்கலாம். 1979ம் ஆண்டு “இனிக்கும் இளமை” என்ற படத்தில் அவர் அறிமுகமானத்தில் இருந்து கடந்த 2015ம் ஆண்டு “சகாப்தம்” என்ற படத்தில் நடித்தது வரை சுமார் 36 ஆண்டுகள் 100க்கும் மேற்பட்ட தமிழ்ப்படத்தில் நடித்துள்ளார்.

“உக்ரைனில் இருந்து நாடு திரும்பும் சிங்கப்பூரர்” : உதவிய மலேசியாவிற்கு நன்றி – சிங்கப்பூர் வெளியுறவுத்துறை அமைச்சகம்

ஸ்டண்ட் கலைஞராக தமிழ் சினிமாவில் அறிமுகமான விஜயகாந்த் பல படங்களில் போலீஸ் கதாபாத்திரம் ஏற்று நடித்துள்ளார். சட்டம் ஒரு இருட்டறை, ஊமை விழிகள், நூறாவது நாள், அம்மன் கோவில் கிழக்காலே, சின்ன கவுண்டர், கேப்டன் பிரபாகரன் என்று தான் அறிமுகமான சில வருடங்களிலேயே சூப்பர் ஹிட் நாயகனாக மாறினார் விஜயகாந்த். தமிழ் சினிமாவில் நிறம் ஒரு தடையல்ல என்பதை நிரூபித்த இரண்டாவது சூப்பர் ஹீரோ இவர் என்றால் அது மிகையல்ல. படிப்படியாக நடிப்பில் உயர்ந்த விஜயகாந்த் தனது படங்களில் சற்று அரசியலை கலக்க துவங்கினர்.

இறுதியில் 2005ம் தேசிய முற்போக்கு திராவிட கழகம் என்ற தனது கட்சியை மக்கள் முன் வெளிப்படுத்தினார். 2006ம் நடந்த தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் 10% வாக்காளர்களை அக்கட்சி பெற்றது மற்றும் மக்களவைத் தேர்தலில் 10.1% பெற்றது என்பதும் குறிப்பிடத்தக்கது. 2011ம் ஆண்டு மீண்டும் மாபெரும் வெற்றி பெற்று தனது மாபெரும் அரசியல் பலத்தை நிரூபித்தார் விஜயகாந்த். 2006 மற்றும் 2011ம் ஆண்டுகளில் MLAவாக இருந்த விஜயகாந்த் அவர்களின் தேசிய முற்போக்கு திராவிட கழகம் ஒரு காலகட்டத்தில் தொய்வை சந்தித்தது. அக்கட்சி கடந்த 2016ம் ஆண்டு தேர்தலில் டெபாசிட் இழந்தது பலருக்கும் பெரும் அதிர்ச்சியை தந்தது. கட்சி தலைவர் விஜயகாந்த தைரொய்ட் நோயால் பாதிக்கப்பட அவரது உடல் நிலையும் கட்சியின் நிலையயும் தொடர்ந்து தளர்ந்தது.

சுமார் ஐந்து ஆண்டு காலமாக கட்சி பெரிய அளவில் செயல்படாமல் இருந்து வரும் நிலையில், கேப்டன் விஜயகாந்த் அவர்களும் தொடர் சிகிச்சையில் தான் இருந்து வருகின்றார். இந்நிலையில் தற்போது ஆள் அடையாளமே தெரியாமல் மாறிப்போயிருக்கும் கேப்டன் விஜயகாந்த அவர்களின் புகைப்படம் வெளியாகி அவர் ரசிகர்கள் மட்டுமல்லாமல் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

“வால சுருட்டிக்கோங்க; இல்லனா ஒட்ட நறுக்கப்படும்” : சிங்கப்பூரில் கடுமையாகும் பாலியல் குற்றங்களுக்கான தண்டனை – தரமான சம்பவம்

நடிகர் சங்க தலைவராக இருந்த அவரை பலரும் கேப்டன் என்று செல்லமாக அழைப்பதுண்டு, சென்னையில் விஜயகாந்த நடத்தும் அன்னதான நிகழ்ச்சிகள் பல உண்டு. அன்னத்தை அள்ளிக்கொடுப்பதில் அவருக்கு நிகர் அவரே என்று கூறும் அளவிற்கு பல நல்ல காரியங்களை இன்று வரை செய்து வருகின்றார். குறிப்பாக துணை நடிகர்களுக்கு இவர் மீது கொஞ்சம் பாசம் அதிகம் என்றே கூறலாம். உண்மையில் கேப்டன் விஜயகாந்த் மீண்டும் புத்துயிர் பெற்று பழைய நிலைக்கு வரவேண்டும் என்பதே பலரின் ஆசையாக உள்ளது.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts