சன்னில் லியோன் என்ற பெயரைக்கேட்டாலே போதும் ரசிகர்கள் முகத்தில் ஜொள்ளு வழியத் தொடங்கிவிடும். ஆபாசப்பட நடிகை என்றாலும் சன்னி லியோனை அவ்வளவு மோசமாக யாரும் கமெண்ட் செய்ய மாட்டார்கள்.
காரணம், தன் தொழிலை செய்வதைக் காட்டிலும் சமூகப்பணிகளில் அதிகளவில் ஈடுபடுவார். ஒரு குழந்தையைத் தத்தெடுத்து வளர்கிறார். நிறைய அமைப்புகள் மூலம் குழந்தைகள், பெண்களுக்கு உதவியும் செய்து வருகிறார்.
இந்நிலையில் தமிழில் சன்னிலியோன் நடிக்கும் படமும் கூடிய விரைவில் வெளியாகவுள்ளது. இதில் தம்பி ராமையா, யூடியூப் புகழ் ஜி.பி முத்துவும் நடிக்கின்றனர்.
ஆந்திராவில் சன்னி லியோன் பிகினி படத்தை தனது தோட்டத்தில் வைத்ததன் மூலம் விவசாயி ஒருவர் 2 நாட்களாக சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறார். அவர் எதற்கு சன்னி லியோன் படத்தை வைத்தார் என்ற காரணம் இதில் கூடுதல் சுவரசியம். ஆந்திராவின் நெல்லூர் மாவட்டத்தில் வசிப்பவர் அங்கினபல்லி சென்சு ரெட்டி. இவர் தன்னுடைய தோட்டத்தில் 10 ஏக்கரில் முட்டைகோஸ், காலிஃப்ளவர், மிளகாய் ஆகியவற்றை சாகுபடி செய்துள்ளார்.
தனது விவசாய நிலத்தில் யாரும் கண் வைத்து விடக்கூடாது என்பதற்காக ஒபிகினியுடன் சன்னி லியோன் இருக்கும் பேனர் ஒன்றை தன்னுடைய வயக்காட்டில் வைத்துள்ளார். அந்த பக்கம் செல்பவர்கள் சன்னி லியோன் படத்தை பார்ப்பார்களே தவிர தோட்டத்துக்கு பக்கம் அவர்கள் கண்கள் செல்லாது என்பதை நினைத்து இந்த விஞ்ஞானி வேலையை செய்திருக்கிறார். என்ன ஒரு அறிவாளிதனம் பாருங்கள்.