உலக அளவில் இரு சக்கர வாகனத்தில் செல்பவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிய வேண்டும் என்பது அவசியமான ஒன்று. மேலும் ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து அந்தந்த நாட்டு அரசுகள் மற்றும் தன்னார்வ அமைப்பினர் பல்வேறு விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.
இந்நிலையில் இந்தியாவிலும் தலைக்கவசம் அணிவது குறித்த விழிப்புணர்வு எப்போதும் மக்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது. அதன் ஒரு பகுதியாக சேலம் கோட்டை பகுதியில் முகமது காசிம் என்பவர் ஹெல்மெட் கடை நடத்தி வருகிறார். இவர் கடந்த சில வருடங்களாக ஹெல்மெட் அணிவதன் அவசியம் குறித்து பல்வேறு வகையான விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றார்.
இந்நிலையில் அதன் ஒரு அங்கமாக இன்று அனைவரும் ஹெல்மெட் அணிய வேண்டும் என்ற விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் ரூபாய் 399இக்கு ஹெல்மெட் வாங்கினால் ஒரு லிட்டர் பெட்ரோல் இலவசமாகவும். அதே சமயம் 499 ரூபாய்க்கு ஹெல்மெட் வாங்கினால் முகக்கவசம், Face Shield Cover மற்றும் சனிடைசர் ஆகியவற்றை இலவசமாக வழங்கினார். மேலும் இந்த விற்பனையை பிரபல நகைச்சுவை நடிகர் பெஞ்சமின் அவர்கள் துவக்கி வைத்தார்.
இந்த நிகழ்வு குறித்து நடிகர் பெஞ்சமின் கூறுகையில் “பொதுமக்களிடையே தலைக்கவசம் அணிவது குறித்து எனது நண்பர் முஸ்தபா பல்வேறு விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகிறார். கட்டாயம் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என்பதை வலியுறுத்தும் வகையில் மட்டுமே இந்த இலவச பெட்ரோல் மற்றும் முகக்கவசம் விற்பனையை துவங்கி உள்ளோம் என்று கூறினார்.