TamilSaaga

“தந்தையை இழந்த நடிகை நந்திதா ஸ்வேதா” : திரையுலகினர் மற்றும் ரசிகர்கள் ஆழ்ந்த இரங்கல்

நடிகை நந்திதா ஸ்வேதா அவர்களின் தந்தை சிவசாமி அவர்கள் தனது 54வது வயதில் மரணமடைந்துள்ள செய்தி கேட்டு திரையுலகமே சோகக்கடலில் ஆழ்ந்துள்ளது. திரையுலகினர் பலரும் நந்திதாவின் இந்த இழப்பிற்கு தங்களது ஆறுதல்களை தெரிவித்துவருகின்றனர். நந்திதா ஸ்வேதா கடந்த 1994ம் ஆண்டு கர்நாடகாவில் பிறந்தவர், இவருடைய இயற்பெயர் ஸ்வேதா ஷெட்டி. பிரபல தொலைக்காட்சி நிறுவனமான உதயா மியூசிக்கில் நிகழ்ச்சி தொகுப்பாளராக தனது பயணத்தை தொடங்கியவர் தான் நந்திதா ஸ்வேதா.

கன்னடத்தில் 2008ம் ஆண்டு வெளியான “நந்தா லவ்ஸ் நந்திதா” என்ற திரைப்படத்தின் மூலம் இவர் கதையின் நாயகியாக அறிமுகமானார். அதன் பிறகு 2012ம் ஆண்டு பிரபல இயக்குனர் பா. ரஞ்சித் இயக்கத்தில் வெளியான “அட்டகத்தி” படம் இவருக்கு ஒரு மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. எதிர்நீச்சல், முண்டாசுப்பட்டி, தளபதி விஜயின் புலி, நலனும் நந்தினியும், கலகலப்பு உள்ளிட்ட பல படங்களில் இவர் நடித்துள்ளார். இறுதியாக தமிழில் வெளியான செல்வராகவனின் “நெஞ்சம் மறப்பதில்லை” படத்தில் இவர் நடித்துள்ளார்.

நல்ல பல படங்களை நந்திதா நடித்து வரும் இந்த நிலையில் அவருடைய தந்தையின் மரணம் அவருக்கு பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்து அவர் வெளியிட்ட ட்விட்டர் பதிவில் “எனது தந்தை திரு. சிவசாமி இன்று தனது 54 வயதில் காலமானார் என்பதை எனது நலன் விரும்பிகள் மற்றும் அனைவருக்கும் தெரிவித்துக்கொள்கிறேன்”அவரது ஆன்மா சாந்தியடையட்டும்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

நடிகைகள் ஐஸ்வர்யா ராஜேஷ், ரெஜினா மற்றும் நடிகர் ஸ்ரீமன் உள்ளிட்ட பலர் அவருக்கு ட்விட்டர் மூலம் ஆறுதல் கூறி வருகின்றனர். மேலும் ரசிகர்கள் பலரும் அவருடைய இந்த இழப்பிற்கு தங்களுடைய ஆறுதல்களை தெரிவித்து வருகின்றனர்.

Related posts