TamilSaaga
actor karthik

சோகத்தில் குடும்பம்… நடிகர் கார்த்திக் மருத்துவமனையில் அனுமதி.

80களில் காதல் நாயகனாக வலம் வந்த நடிகர் கார்த்திக் திடீரென்று இன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். வரது வீட்டில் உடற்பயிற்சி செய்யும்போது எதிர்பாராத விதமாக கீழே விழுந்ததால் கார்த்திக்குக்கு காலில் முறிவு ஏற்பட்டுள்ளது.

நவசர நாயகன் கார்த்திக் என்று துனை பெயருடன் அழைக்கப்படும் கார்த்திக் சென்னை போயஸ் கார்டனில் வசித்து வருகிறார். தற்போது குணசித்திர வேடங்களிலும், வில்லனாகவும் நடித்து வருகிறார். இவரின் எனர்ஜியை கண்டு வியந்து போகாதவர்களே இல்லை எனலாம். அந்த அளவுக்கு மிகவும் சுறுசுறுப்பாக எப்போதுமே காணப்படுவார்.

இந்நிலையில் கார்த்தி வழக்கம் போல் அவரது வீட்டில் உடற்பயிற்சி செய்யும்போது எதிர்பாராத விதமாக கீழே தவறி விழுந்தார். இதனால் அவருக்கு காலில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனே அவரை அடையாறில் உள்ள தனியார் மருத்துவமனையில் குடும்பத்தினர் அனுமதித்தனர்.

சில ஆண்டுகளுக்கு முன்பு விபத்தில் சிக்கி காலில் அறுவை சிகிச்சை செய்து கொண்ட அதே இடத்தில் மீண்டும் அடிபட்டதால், எலும்பில் சிறிய விரிசல் ஏற்பட்டு இருப்பது ஸ்கேனில் தெரிய வந்தது. இதையடுத்து டாக்டர்கள் கார்த்திக்குக்கு தீவிர சிகிச்சை அளித்து வருகிறார்கள்.

இதனால் அவரின் குடும்பத்தினர் சோகத்தில் உள்ளனர். கார்த்திக்கின் நண்பர்கள் மற்றும் உறவினர்களும் அவரை நலம் விசாரிக்க மருத்துவமனை விரைகின்றனர்.

Related posts