TamilSaaga

விமானத்தில் “பவர் பேங்க்” எடுத்துச் செல்ல முடியுமா? அடிக்கடி போறவங்களுக்கும் கூட இந்த விசித்திர ரூல்ஸ் தெரியாது!

நீங்கள் எந்த நாட்டிற்கு போனாலும், விமானத்தில் பவர் பேங்க் எடுத்துச் செல்ல பின்பற்றப்படும் விதிமுறைகள் குறித்து இச்செய்தியில் பார்ப்போம்.

உங்கள் விமானத்தின் பயணத்தின் போது, Check-in Baggage-ல் உங்கள் மொபைல் ஃபோன்களுக்கான பவர் பேங்க்குகளை எடுத்துச் செல்ல அதிகாரிகள் அனுமதிக்க மாட்டார்கள். ஆனால் உங்கள் Cabin Baggage-ல் அதே பவர் பேங்க் எடுத்துச் செல்ல அனுமதி உண்டு. விமான நிறுவனங்கள் பின்பற்றும் இந்த விதிமுறைகள் கேட்பதற்கு விசித்திரமாக இருக்கலாம். ஆனால், அதுதான் உண்மை.

ஏன் இப்படியான விதிமுறைகள் என்று தெரிந்து கொள்வதற்கு முன்பு, Check-in Baggage மற்றும் Cabin Baggage ஆகிய இரண்டுக்கு இடையேயான வித்தியாசத்தை பற்றி முதலில் தெரிந்து கொள்ள வேண்டும்.

மேலும் படிக்க – “இன்று இரவு என் மனைவியுடன் படு” – சிங்கப்பூரில் சக ஊழியருக்கு “மனைவியை விருந்தாக்கிய” கணவன்

Check-in Baggage-ஐ நீங்கள் கைகளில் எடுத்துச் செல்ல முடியாது. அதாவது Checked Baggage Deck-கிற்கு கீழே, மற்ற சரக்குகளுடன் வைத்து எடுத்து வருவார்கள். ஆனால், Cabin Baggage அப்படி அல்ல. விமானத்தின் உள்ளே எடுத்துச் செல்லலாம். அதாவது விமானத்தின் overhead stowage bins மற்றும் தேவைப்பட்டால் உங்கள் இருக்கைக்கு அடியில் கூட பொருட்களை எடுத்துச் செல்லலாம்.

இங்கே, பவர் பேங்க் விமானத்தின் உள்ளே நீங்கள் எடுத்துச் செல்ல அனுமதியுண்டு. ஆனால், சரக்குகள் வைக்கப்பட்டிருக்கும் -ல் Checked Baggage-ல் கொண்டுச் செல்ல அனுமதிக்கப்படுவதில்லை.

இதற்கு மிக முக்கிய காரணம் பாதுகாப்பு தான். ஆம்! பாதுகாப்பிற்காக தான் Checked Baggage-ல் பவர் பேங்க் கொண்டுச் செல்ல அனுமதி மறுக்கப்படுகிறது. ஏனெனில், பவர் பேங்க்குகளில் லித்தியம் செல்கள் (Lithium Cells) இருக்கும். இந்த லித்தியம் பேட்டரிகள் மூலம் தீ பற்றுவதற்கான வாய்ப்புகள் அதிகம்.

1991 ஆம் ஆண்டு முதல் விமானங்கள் அல்லது விமான நிலையங்களில் lithium ion battery-கள் தீப்பிடிப்பது அல்லது வெடிப்பது என்று இதுவரை 191 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக FAA (Federal Aviation Administration) தெரிவித்துள்ளது. இதே போன்ற தொடர்ச்சியான சம்பவங்கள் தான் விமானங்களில் லித்தியம் பேட்டரிகள் மீதான கட்டுப்பாடுகளுக்கு வழிவகுத்தன.

சரி.. அப்போ கேபினில் கொண்டுச் செல்லப்படும் போது மட்டும் தீப்பிடிக்காதா என்று உங்களுக்கு கேள்வி எழலாம். நிச்சயம் தீப்பிடிக்க வாய்ப்புள்ளது தான். ஆனால், பல சரக்குகளோடு ஒன்றோடு ஒன்றாக பவர் பேங்க் கொண்டுச் செல்லப்படும் போது தீப்பிடித்தால், அந்த தீ குறித்து நாம் அறிவதற்குள் பெரிய பாதிப்புகள் ஏற்பட்டுவிடலாம். அதுமட்டுமின்றி, பல சரக்குகள் இருக்குமிடத்தில் எந்த இடத்தில் பவர் பேங்க் இருக்கிறது என்று தேடிக் கண்டுபிடிப்பது சாத்தியமற்றது. ஒவ்வொரு சரக்குப் பையாக திறந்து தேடிக் கண்டுபிடிப்பதற்குள் கதை முடிந்திருக்கும்.

மேப்பும் படிக்க – “மனித வாழ்க்கையை நேசிக்க உதவுகிறது” : சிங்கப்பூரில் அழுகிய உடல்களுடன் பணிசெய்யும் மனிதன் – நீங்க ரியல் ஹீரோ

அதே சமயம், கேபினில் ஒரு பயணி பவர் பேங்க்கை கொண்டுச் செல்லும் போது, அது தீப்பிடித்தால் உடனடியாக அது கண்டுபிடிக்கப்பட்டு தீ அணைக்கப்படும் வாய்ப்பு மிக மிக அதிகம், ஆபத்து ரேஷியோ என்பதும் குறைவு.

இன்றைய நவீன காலக்கட்டத்தில் நாம் சாப்பிடாமல் இருந்து வயிறு காலியாக இருந்தால் கூட பொறுத்துக் கொள்கிறோம். ஆனால், மொபைல் ஃபோனின் பேட்டரி காலியாக இருந்தால், யாராலும் தாங்கிக் கொள்ள முடிவதில்லை. ஆகையால், பவர் பேங்க் என்பது இன்றியமையாத ஒன்றாகிவிட்டது. ஸோ, கவனமா இருங்க.

“தமிழ் சாகாவின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற இந்த லிங்கை கிளிக் செய்யவும்”

Related posts