“என்ன கருமத்தயா பண்ணி வச்சிருக்க?” என்பது அமைந்துள்ளது இந்த சம்பவம். நேற்று (மார்ச். 29) மாலை, சிங்கப்பூர் தேசிய மைதானத்தில் நடந்த கால்பந்து சங்கம் (FAS) முத்தரப்புத் தொடர் 2022 தொடர் போட்டியில், 2-0 என்ற கோல் கணக்கில் பிலிப்பைன்ஸை சிங்கப்பூர் அணி தோற்கடித்தது.
ஆனால், இந்த போட்டியின் முடிவை விட, உள்ளூர், வெளியூர் சென்று ஆல் சென்டரிலும் வைரல் ஆகியிருப்பது இந்த புகைப்படம் தான்.
ஆட்டத்தின் முதல் பாதியில், சிங்கப்பூர் அணியின் முதல் கோலை சஃபுவான் பஹாருடின் (Safuwan Baharudin) அடிப்பதற்கு சில வினாடிகளுக்கு முன், பிலிப்பைன்ஸ் அணியின் Defender டியாகோ பர்டான்கா (Diego Bardanca) சிங்கப்பூர் லயன்ஸ் அணியின் Striker Ikhsan Fandi-யின் அந்தரங்க பகுதியை பிடித்துவிட்டார்.
Ikhsan உடனடியாக பர்டான்காவை தள்ளிவிட்டு, தொடர்ந்து ஓட ஆரம்பித்துவிட்டார். இந்த சம்பவம் அப்படியே வீடியோவாக ரெக்கார்டு ஆகிவிட்டது.
சும்மா விடுவார்களா ரசிகர்கள்… ரஜினி பட கட்அவுட் போல, இந்த கலைநயமிக்க புகைப்படத்தை சமூக தளங்களில் வைரலாக்க, அதற்கு Ikhsan Fandi சிரிப்பு எமோஜி வெளியிட்டு ரிப்ளை கொடுத்துள்ளார்.